Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: கருண் நாயரை நீக்கிய கம்பீர்.. இன்று ரஞ்சி கிரிக்கெட்டில் 602 ரன்கள்.. விளாசும் ரசிகர்கள்

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறி வெறும் 201 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கோபம் அடைய வைத்திருக்கிறது.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு இனி வேண்டாம் என இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட கருண் நாயர் தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் மொத்தமாக 602 ரன்கள் அடித்து அசத்தி இருக்கிறார்.பல ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயர், இந்திய டெஸ்ட் அணியில் கடந்த இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டார்.

Karun nair

ஆனால் அந்தத் தொடரில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் கருண் நாயருக்கு முழு வாய்ப்பையும் வழங்காமல் இந்திய அணி அடிக்கடி அவரை மாற்றியது.நடுவரிசையில் இருந்து மூன்றாவது வீரராகவும் பின்னர் அணியை விட்டு ஒரு போட்டியில் நீக்கியும் கம்பீர் இதே போல் தான் சேட்டை செய்து வந்தார்.

இதனால் அந்தத் தொடரில் கருண் நாயர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். எனினும் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட கருண் நாயருக்கு இந்தியாவில் விளையாட ஒரு முறை கூட வாய்ப்பு வழங்காமல் கம்பீர் அதிரடியாக நீக்கினார்.

கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போதே கருண் நாயருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.இந்த நிலையில் மனம் தளராத கருண் நாயர் மீண்டும் ரஞ்சி கிரிக்கெட்டில் திரும்பி பட்டையை கிளப்பி இருக்கிறார். 5 போட்டிகளில் விளையாடியுள்ள கருண் நாயர் 7 இன்னிங்ஸில் மொத்தமாக 602 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். கருண் நாயர் அதிகபட்ச ஸ்கோர் இந்த ஆண்டு 233 ஆகும். இதில் அவருடைய சராசரி 100 என்ற அளவில் இருக்கிறது.

தற்போது கருண் நாயர் தேவையில்லாமல் அணியில் இருந்து கம்பீரும், அகர்கரும் நீக்கி இருக்கின்றனர். கருண் நாயர் இந்தியாவில் விளையாட ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் அவர் மீண்டும் நன்றாக விளையாடி தனது அனுபவத்தை பயன்படுத்தி இருப்பார். இதனால் எந்த வீரர்களுக்கும் சரியான வாய்ப்பை வழங்காமல் வீணடித்து வருவதாக ரசிகர்கள் சாடியுள்ளனர்.

Story first published: Monday, November 24, 2025, 16:52 [IST]
Other articles published on Nov 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+