For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA : தோனி ரெக்கார்டை உடைத்த கே எல் ராகுல்.. யாராலும் தொட முடியாத 14 வருட ரெக்கார்டு காலி

பார்ல் : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் கடந்த 14 ஆண்டுகளாக யாராலும் தொட முடியாமல் இருந்த தோனியின் சாதனை ஒன்றை சத்தமே இல்லாமல் செய்து சாதித்து இருக்கிறார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியில் கே எல் ராகுல் 35 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு முந்தைய போட்டியில் அவர் அரைசதம் அடித்து இருந்தார். அப்போது அவர் 2023ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் மட்டும் 1000 ரன்களை கடந்து இருந்தார்.

IND vs SA : KL Rahul breaks MS Dhonis 14 year old record

இந்த நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி கே எல் ராகுலுக்கு இந்த ஆண்டின் கடைசி ஒருநாள் போட்டி. அத்துடன் இந்த ஆண்டு அவர் 24 ஒருநாள் போட்டி இன்னிங்க்ஸ்களில் 1060 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம், இந்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களில் ஒரே ஆண்டில் 1000 ஒருநாள் போட்டி ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை செய்தார் கே எல் ராகுல். முன்னதாக தோனி மட்டுமே இந்த மைல்கல் சாதனையை செய்து இருந்தார்.

2008 ஆம் ஆண்டு தோனி ஒருநாள் போட்டிகளில் 1098 ரன்கள் குவித்து இருந்தார். அதன் பின் 2009ஆம் ஆண்டு 1198 ரன்கள் குவித்து இருந்தார். அதன் பின் அதே போல ஒரே ஆண்டில் 1000 ஒருநாள் போட்டி ரன்களை கடந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகி இருக்கிறார் கே எல் ராகுல்.

2023 உலகக்கோப்பை தொடரில் மட்டும் கே எல் ராகுல் 10 இன்னிங்க்ஸ்களில் 452 ரன்கள் சேர்த்து இருந்தார். 2023 ஆம் ஆண்டு மொத்தம் 24 இன்னிங்க்ஸ்களில் 1060 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இதன் சராசரி 66.25. இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் சேர்த்த இந்திய வீரர்கள் வரிசையில் நான்காவது இடத்தில் இருக்கிறார் கே எல் ராகுல்.

2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல் -

சுப்மன் கில் - 1584 ரன்கள் - 29 இன்னிங்க்ஸ்
விராட் கோலி - 1377 ரன்கள் - 24 இன்னிங்க்ஸ்
ரோஹித் சர்மா - 1255 ரன்கள் - 26 இன்னிங்க்ஸ்
கே எல் ராகுல் - 1060 ரன்கள் - 24 இன்னிங்க்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர் - 846 ரன்கள் - 19 இன்னிங்க்ஸ்

Story first published: Thursday, December 21, 2023, 23:33 [IST]
Other articles published on Dec 21, 2023
English summary
IND vs SA : KL Rahul breaks MS Dhoni's 14 year old record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+