Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இன்னும் தூக்கம் கலையலையா? அல்வா கேட்சை தவறவிட்ட ராகுல்.. கடுப்பான பும்ரா

கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ராகுல், கைக்கு வந்த சுலபமான கேட்சை தவறிவிட்டது ரசிகர்களை கடுப்படைய செய்து இருக்கிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கி இருக்கிறது.

கடந்த கொல்கத்தா டெஸ்ட் ஆடுகளம் போல் இல்லாமல் இந்த ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வது அந்த அணிக்கு பெரும் சாதகமாக மாறி இருக்கிறது.

Ind vs sa

இதனால் தென்னாப்பிரிக்க விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர். ஆடுகளம் பெரிய அளவு பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லாததால், விக்கெட்டுகளை எடுக்க ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராட வேண்டியது இருந்தது. இந்த நிலையில் போட்டி அரை மணி நேரம் முன்பு துவக்கப்பட்டிருப்பதால் இது பெரும்பாலான வீரர்களுக்குமே ஒரு புதிய அனுபவமாக இருந்தது.

பலரும் மைதானத்தில் சோகமாகவே நின்று கொண்டிருந்தனர். காலையிலே வெயில் சுட்டெரித்ததால் பும்ரா ஒரு போர் குதிரை போல் ஓடிவந்து விக்கெட்டுகளை எடுக்க கடுமையாக முயற்சி செய்தார். அப்போது தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர் மார்க்கரம் பேட்டிங் செய்தபோது, பும்ரா வீசிய பந்தை அவர் எட்ஜ் செய்தார்.

பந்து நேராக ஸ்லீப்பில் நின்று கொண்டிருந்த ராகுலிடம் பறந்தது கைக்கு வந்த அழகான கேச்சை ராகுல் தவறவிட்டது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பும்ரா விரக்தியில் முகத்தை கையால் மூடிக்கொண்டு சென்றார்.

எய்டன் மார்க்கரம் போன்ற ஒரு நட்சத்திர வீரர் விக்கெட்டை ராகுல் தவற விட்டு இருப்பது இந்தியாவுக்கு சோகமாக மாறி இருக்கிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு இந்த ஜோடி சிறப்பாக விளையாடிய முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் மேல் சேர்த்து, இந்தியாவுக்கு தலைவலி கொடுத்து வருகின்றனர். அந்த பந்தை ராகுல் பிடித்திருந்தால் போட்டி தலைக்கீழ் கூட மாறி இருக்கலாம். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு கேட்ச் வாய்ப்பும் வரவில்லை. தென்னாப்பிரிக்கா வீரர்களும் எந்த ஒரு தவறும் பேட்டிங்கில் செய்யவில்லை.

Story first published: Saturday, November 22, 2025, 10:45 [IST]
Other articles published on Nov 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+