Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: மெதுவா போடு.. சூப்பர் மச்சான்.. வாசிங்டன் சுந்தருடன் தமிழில் பேசிய கேப்டன் கேஎல் ராகுல்

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ராகுல் பவுலர்களை சரியான முறையில் மாற்றி, நல்ல யுத்திகளை பயன்படுத்தினார். ஆனால் ராகுலுக்கு கொஞ்சம் கூட பில்டர்கள் ஆதரவு வழங்கவில்லை. பில்டிங்கில் பல ரன்களை விட்டுக் கொடுத்ததும் கேட்சை தவறவிட்டதும் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது.

விக்கெட் கீப்பராக ராகுல் செயல்படுவதால், போட்டியை 360° பின்னால் நின்று கண்காணிக்க முடியும். ஆடுகளத்தில் பந்து எவ்வாறு செயல்படும் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப பவுலர்களுக்கு அறிவுரை சொல்ல முடியும். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் பந்துகளை வீச கடுமையாக போராடினர்.

KL Rahul Washington sundar

குறிப்பாக அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருந்தும் வெறும் 21 ஓவர்கள் தான் அவர்களிடம் இருந்து பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. இதில் மொத்தமாக ஒரு விக்கெட் மட்டும்தான் வீழ்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தரை பயன்படுத்திய கேஎல் ராகுல் அவருக்கு சில அறிவுரைகளை தமிழில் சொன்னது ஸ்டெம்பில் இருந்த மைக்கேல் பதிவானது.

இது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. வாஷிங்டன் சுந்தரிடம், "மச்சி, பந்தை மெதுவா போடு என்று அவர் அறிவுரை வழங்கினார். பந்தின் வேகத்தை குறைப்பதன் மூலம் அது ஆடுகளத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதற்காக ராகுல் இந்த வார்த்தையை பயன்படுத்தினார். மேலும், சூப்பர் மச்சி! இங்கேயே பந்தை போடு என்று தமிழில் அவருக்கு அறிவுரை வழங்கினார்.

ராகுல் பெங்களூரை சேர்ந்தவர். பெரும்பாலான கர்நாடகா மற்றும் கேரளா வீரர்களுக்கு தமிழ் நன்றாக தெரியும். இதனால் தமிழ்நாட்டில் இருந்து வரும் வீரர்களுடன் தமிழில் பேசுவதை சிலர் வாடிக்கையாக பயன்படுத்துகிறார்கள். ஹிந்தி வார்த்தை ஒன்று இரண்டு கூட வெளிநாட்டு வீரர்களுக்கு ஐபிஎல் விளையாடுவதன் மூலம் தெரியும்.ஆனால் சிஎஸ்கே அணியைத் தவிர மற்ற அணியில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கு பெரிய அளவு தமிழ் வார்த்தைகள் தெரியாது என்பதால் இது போன்ற யுக்திகளை ராகுல் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 4, 2025, 8:26 [IST]
Other articles published on Dec 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+