For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி.. இந்த டீம்லயும் இடமில்லை.. ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பாருங்க.. கழட்டி விடப்பட்ட இளம் வீரர்!

Recommended Video

IND VS WI TEST 2019 | ராகுலுக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு!- வீடியோ

மொஹாலி : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன டி20 தொடரில் இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் டெஸ்ட் அணியில் தன் வாய்ப்பை இழந்த கேஎல் ராகுல், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் இடம் பெற்று இருந்தார்.

அணியில் போட்டி

அணியில் போட்டி

ஆனால், டி20 அணியில் இடம் பெற வீரர்கள் இடையே போட்டி அதிகமாக இருப்பதால் ராகுலுக்கு அணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்காது, வெளியில் தான் அமர வைக்கப்படுவார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

இரண்டாவது டி20 போட்டி

இரண்டாவது டி20 போட்டி

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று மொஹாலியில் நடைபெற உள்ளது.

ராகுல் இல்லை

ராகுல் இல்லை

இந்தப் போட்டிக்கான அணியில் ராகுல் இடம் பெற மாட்டார் என்றே விமர்சகர்கள் கருதுகிறார்கள். துவக்க வீரரான ராகுல் முன்பு, அணியில் துவக்கம் மற்றும் நான்காம் வரிசை என இரண்டு இடங்களிலும் இறங்கி பேட்டிங் செய்து வந்தார்.

இடம் பெறுவாரா?

இடம் பெறுவாரா?

இந்த நிலையில், துவக்க வீரர் தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சரியாக ரன் குவிக்காததால், ராகுல் இடம் பெறுவாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால், வலைப் பயிற்சியில் தவான் தான் அதிக நேரம் செலவு செய்தார்.

பேட்டிங் பயிற்சி

பேட்டிங் பயிற்சி

ராகுல் குறைந்த நேரமே பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். அதைக் குறிப்பிட்ட விமர்சகர்கள், மிடில் ஆர்டரிலும், ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட் உள்ளிட்ட வீரர்கள் உறுதியாக இடம் பெறுவார்கள் என்பதால், ராகுல் இரண்டாம் டி20 அணியில் இடம் பெற மாட்டார் என்று கூறினார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சொதப்பி இருந்தார் ராகுல். அந்த டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்க்ஸ்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், தவறான ஷாட்கள் ஆடுவதை மாற்றிக் கொள்ளாததால் டெஸ்ட் அணியில் இடத்தை இழந்தார்.

இடம் மறுப்பு

இடம் மறுப்பு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக, இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் இடம் பெற்றார். இந்த நிலையில், டி20 அணியிலும் தன் வாய்ப்பை இழக்கப் போகிறார் ராகுல்.

ஷிகர் தவான் பார்ம் அவுட்?

ஷிகர் தவான் பார்ம் அவுட்?

வெஸ்ட் இண்டீஸ் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடிய துவக்க வீரர் ஷிகர் தவான் அதிக பட்சமாக 36 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அதனால், இந்தியா ஏ அணியில் ஆடி பயிற்சி பெற அனுப்பப்பட்டார்.

இரண்டு அரைசதம்

இரண்டு அரைசதம்

இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அணிகள் மோதிய இரண்டு போட்டிகளில் ஆடிய தவான், இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து தன் பார்மை நிரூபித்தார். அதை அடுத்து அவரை அணியில் எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

ராகுல் கதி என்ன?

ராகுல் கதி என்ன?

அதே சமயம், பரிசோதனை முயற்சியாக ராகுல் இடம் பெறுவாரா என்ற கேள்வியும் இருந்தது. ஆனால், ராகுலுக்கு டி20 அணியிலும் கல்தா கொடுக்க தயாராகி இருக்கிறார் கேப்டன் கோலி. அடுத்து ஒருநாள் அணியிலும் ராகுல் நீக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Wednesday, September 18, 2019, 13:08 [IST]
Other articles published on Sep 18, 2019
English summary
IND vs SA : KL Rahul won’t get chance in second T20 against South Africa
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+