For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பால்கனியில் பரிதாபமாக நின்றிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன்.. கீழே சைகை காட்டி சிரித்த கோலி, ஜடேஜா!

Recommended Video

India vs south africa 3rd test | India beat South Africa by an innings and 202 runs

ராஞ்சி : தென்னாப்பிரிக்க அணிக்கு பாலோ ஆன் கொடுக்கும் முன் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஜடேஜா தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ்-ஐ பார்த்து பேட்டிங் சைகை காட்டி சிரித்தனர்.

கோலி - ஜடேஜா சாதாரணமாக இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் நீங்கள் தான் எனக் கூறுவது போல தெரிந்தாலும், அவர்கள் சிரித்துக் கொண்டே சைகை காட்டியதை வைத்து சில ரசிகர்கள், பாப் டுபிளெசிஸ்-ஐ கிண்டல் செய்தார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெற்றிக்கு அருகே இந்தியா

வெற்றிக்கு அருகே இந்தியா

இந்தப் போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணியை 162 ரன்களுக்கு ஆல் - அவுட் செய்து பாலோ ஆன் கொடுத்து மீண்டும் விக்கெட் வேட்டை நடத்தியது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 2 விக்கெட்கள் மட்டுமே தேவை.

முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம்

முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம்

இந்தப் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் எடுத்தது. அத்துடன் டிக்ளர் செய்தார் கேப்டன் கோலி. ரோஹித் சர்மா 212, ரஹானே 115 ரன்கள் குவித்து இருந்தனர்.

தென்னாப்பிரிக்கா விக்கெட் சரிவு

தென்னாப்பிரிக்கா விக்கெட் சரிவு

அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி மிக மோசமாக விக்கெட்களை இழந்து வந்தது. முதல் இரண்டு பொடிகளை காட்டிலும் இந்த முறை படுமோசமாக விக்கெட்களை இழந்தது.

இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

162 ரன்களுக்கு முதல் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது அந்த அணி. அறிமுக வீரர் ஹம்சாஅதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்து இருந்தார். இந்தியா 335 ரன்கள் முன்னிலை பெற்றது.

கோலி முடிவு

கோலி முடிவு

அடுத்து இந்தியா மீண்டும் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடுமா? அல்லது பாலோ ஆன் கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்போது விராட் கோலி பாலோ ஆன் கொடுக்க முடிவு செய்தார்.

சைகை காட்டினார்

சைகை காட்டினார்

முதல் இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்க அணியை விரைவாக சுருட்டிய மகிழ்ச்சியில் இருந்த ஜடேஜா - கோலி இருவரும் பேசி சிரித்துக் கொண்டே மைதானத்தில் இருந்து, பால்கனியில் நின்று இருந்த தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டுபிளெசிஸ்-க்கு "தென்னாப்பிரிக்கா தான் இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட வேண்டும்" என பேட்டிங் ஆடுவது போல சிரித்துக் கொண்டே சைகை செய்தனர்.

பரிதாப நிலையில் டுபிளெசிஸ்

பரிதாப நிலையில் டுபிளெசிஸ்

ஏற்கனவே, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்று, டெஸ்ட் தொடரை இழந்து இருக்கும் தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ், மூன்றாவது டெஸ்டிலும் தோல்வி தான் என தெரிந்து பரிதாபமாக நின்று இருந்த நிலையில், அவரைப் பார்த்து ஜாலியாக சைகை செய்தனர் கோலி - ஜடேஜா.

கோலியின் ஆனந்தம்

கோலியின் ஆனந்தம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா வீரர்கள் நட்பு ரீதியாகவே பழகி வரும் நிலையில், இதில் குத்திக் காட்டும் வகையிலான கிண்டல் இருக்க வாய்ப்பில்லை என்றாலும், வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல இருந்தது கோலியின் ஆனந்தம்.

இரண்டாம் இன்னிங்க்ஸ்

இரண்டாம் இன்னிங்க்ஸ்

தென்னாப்பிரிக்க அணி எதிர்பார்த்தது போலவே இரண்டாம் இன்னிங்க்ஸிலும் எந்த போராட்டமும் இன்றி சரணடைந்தது. 132 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது அந்த அணி. இந்திய அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்கள் மட்டுமே தேவை.

இந்தியா பந்துவீச்சு அபாரம்

இந்தியா பந்துவீச்சு அபாரம்

இந்திய அணியின் பந்துவீச்சு மூன்றாவது டெஸ்டில் அபாரமாக இருந்தது. முதல் இன்னிங்க்ஸில் உமேஷ் 3, ஷமி 2, நதீம் 2, ஜடேஜா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இரண்டாவது இன்னிங்க்ஸில் ஷமி 3, உமேஷ் 2, ஜடேஜா 1, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.

Story first published: Monday, October 21, 2019, 19:30 [IST]
Other articles published on Oct 21, 2019
English summary
IND vs SA : Kohli - Jadeja laughed at Faf du Plessis before giving follow on. Du Plessis was standing on the balcony while this incident happened.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+