Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA : தில்லுக்கு துட்டு.. இனிமே இது தான் வழி.. மொத்தம் 9 பேட்ஸ்மேன்களை இறக்கும் கேப்டன் கோலி

Recommended Video

குடையை பிடித்துக் கொண்டு ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிய கேப்டன் கோலி.. அப்ப மேட்ச் ஊத்திக்கிச்சா?

தரம்சாலா : இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையே ஆன முதல் டி20 போட்டியில் இந்திய அணி 9 பேட்ஸ்மேன்களோடு களமிறங்க உள்ளது.

என்னது 9 பேட்ஸ்மேன்களா? ஏன் இப்படி? என்று கேட்டால், இனிமேல் இது தான் டி20யில் ட்ரெண்டு என்கிறார் நம் கேப்டன் கோலி.

அப்ப பவுலர்ஸ்-ஏ கிடையாதா? என்றால் அவர்கள் தான் பேட்ஸ்மேன் என்கிறார். அதாவது ஆல் ரவுண்டர்ஸ்-ஐ கும்பலாக இறக்கப் போகிறார். அதைத் தான் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் பார்க்கப் போகிறோம்.

முதல் டி20

முதல் டி20

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன முதல் டி20 தொடர் தரம்சாலாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான பயிற்சிகளில் இரு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்திய அணி அதிக இளம் வீரர்களை கொண்டு களமிறங்க உள்ளது.

இந்திய அணியின் திட்டம்

இந்திய அணியின் திட்டம்

போட்டிக்கு முன்பு பேட்டி அளித்த இந்திய அணி கேப்டன் கோலி, மற்ற அணிகள் ஒன்பது பேட்ஸ்மேன்கள் வைத்துக் கொண்டு ஆடும் போது, நாமும் ஏன் அது போல முயற்சி செய்யக் கூடாது என்று கேட்டார்.

நீண்ட பேட்டிங் வரிசை

நீண்ட பேட்டிங் வரிசை

அதே திட்டத்தோடு தான் முதல் டி20யிலும் இந்திய அணி களமிறங்க உள்ளது. ஒன்பது பேட்ஸ்மேன்கள் வைத்துக் கொண்டு ஆட உள்ளது. பேட்டிங் சரி. பந்துவீச்சு என்ன ஆகும்?

ஆல்-ரவுண்டர்ஸ் தேவை

ஆல்-ரவுண்டர்ஸ் தேவை

இரண்டு முழு நேர பந்துவீச்சாளர்கள் போக, நான்கு ஆல்-ரவுண்டர்களை களமிறக்குவது தான் அணியின் திட்டம். இந்த திட்டம் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே ஓரளவுக்கு செயல்பாட்டுக்கு வந்தது. அங்கே எட்டு பேட்ஸ்மேன்களோடு ஆடியது இந்திய அணி.

பந்துவீச்சு பிரச்சனைக்கும் தீர்வு

பந்துவீச்சு பிரச்சனைக்கும் தீர்வு

நான்கு ஆல்-ரவுண்டர்களும், இரண்டு முழு நேர பந்து வீச்சாளர்களும் இருப்பதால் பந்துவீச்சிலும் ஆறு வீரர்கள் இருப்பார்கள். அது சிக்கலான நேரத்தில் பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த உதவியாக இருக்கும்.

முழு நேர பேட்ஸ்மேன்கள்

முழு நேர பேட்ஸ்மேன்கள்

உத்தேசமாக கோலி தேர்வு செய்யப் போகும் அணி இது தான். முதல் டி20க்கான அணியில் இடம் பெறப் போகும் ஐந்து பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான். ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்).

முழு நேர பந்துவீச்சாளர்கள்

முழு நேர பந்துவீச்சாளர்கள்

இரண்டு முழு நேர பந்துவீச்சாளர்கள் தீபக் சாஹர் மற்றும் நவ்தீப் சைனி. கலீல் அஹ்மது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு பெற்றார். அதில் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. புவனேஸ்வர் குமார் காயம் காரணமாகவும், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டும் இருப்பதால் அணியில் இடம் பெறவில்லை.

நான்கு ஆல் ரவுண்டர்கள்

நான்கு ஆல் ரவுண்டர்கள்

நான்கு ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, வாஷிங்க்டன் சுந்தர், ஜடேஜா. இதன் மூலம், அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள், மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள்.

நன்மை என்ன?

நன்மை என்ன?

நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட அணி இருப்பதால், சேஸிங் செய்யும் போது ஒவ்வொரு பேட்ஸ்மேனும் அடித்து ஆட யோசிக்காமல் ஆடலாம். ஏழு பேட்ஸ்மேன்கள் மட்டுமே ஆடினால் 4 விக்கெட் வீழ்ந்த பின் அதிரடி ஷாட்கள் ஆட யோசிக்கும் நிலை ஏற்படும். ஒன்பது பேட்ஸ்மேன்கள் இருக்கும் போது அந்த நிலை ஏற்படாது.

இந்திய அணி

இந்திய அணி

முதல் டி20க்கான உத்தேச இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

Story first published: Sunday, September 15, 2019, 10:40 [IST]
Other articles published on Sep 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+