Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்விக்கு அப்புறம் கோலி பேசிய பேச்சு இருக்கே.. தாங்கமுடியலை சாமி! உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்!

Recommended Video

இந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்

பெங்களூரு : டி20 போட்டியில் தோல்வி அடைந்த பின் கேப்டன் கோலி பேசிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சேஸிங் செய்ய சாதகமான பெங்களூரு மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் கோலி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார்.

பயிற்சி qஅளிக்கிறோம்

பயிற்சி qஅளிக்கிறோம்

டாஸ் முடிவு குறித்து பேசிய கோலி, டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த முடிவை எடுத்ததாகவும், சேஸிங் நன்றாக செய்வோம், என்பதால் முதலில் பேட்டிங் செய்வதை வளர்த்துக் கொள்ளப் போவதாகவும் கூறினார்.

போட்டியில் தோல்வி

போட்டியில் தோல்வி

ஆனால், பேட்டிங்கில் மோசமாக சொதப்பிய இந்திய வீரர்கள் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தனர். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டி காக் 79 ரன்கள் அடிக்க அந்த அணி வெற்றி இலக்கை எளிதாக எட்டி அபார வெற்றி பெற்றது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்த தோல்விக்கு இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சரியில்லை என காரணம் கூறினாலும், டாஸ் முடிவு தான் முக்கிய காரணம். பெங்களூரு மைதானத்தில் சேஸிங் செய்யும் அணியே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது எனும் நிலையில் ஏன் முதலில் பேட்டிங் ஆட வேண்டும்?

நீண்ட பேட்டிங் வரிசை

நீண்ட பேட்டிங் வரிசை

அதே போல, இந்திய அணி நீண்ட பேட்டிங் வரிசை கொண்டு ஆடுகிறோம் என அணியில் நான்கு ஆல் - ரவுண்டர்களை வைத்துள்ளது. அவர்களில் ஒருவர் கூட பேட்டிங்கில் அணியை காப்பாற்றவில்லை. அந்த திட்டமும் படுதோல்வி அடைந்தது.

பரிசோதனை தவறில்லை

பரிசோதனை தவறில்லை

பரிசோதனை செய்வதோ, அதனால் போட்டியில் தோற்பதோ தவறில்லை. நீண்ட பேட்டிங் வரிசை திட்டம் கூட பின்னாட்களில் அணிக்கு கை கொடுக்கும் என கருதலாம். ஆனால், சேஸிங் ஆடுகளங்களில் முதலில் பேட்டிங் ஆடுவது தேவையற்ற பரிசோதனை ஆக உள்ளது. அந்த முயற்சிகளை தொடரை வென்ற பின் மீதமுள்ள போட்டிகளில் வைத்துக் கொள்ளலாம் என்பதே சாதாரண ரசிகனின் கருத்து.

கோலி பேச்சு

கோலி பேச்சு

ஆனால், இனி டி20 போட்டிகளில் டாஸ் வென்று வேண்டும் என்றே பேட்டிங் தேர்வு செய்து ஆடுவோம் என கோலி கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டி20 உலகக்கோப்பை வரை டி20 போட்டிகளில் டாஸ் வென்றால் பேட்டிங் ஆடுவோம் எனக் கூறி இருக்கிறார்.

பேட்டிங் பயிற்சி

பேட்டிங் பயிற்சி

மேலும், இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஒன்பதாவது பேட்ஸ்மேன் வரை பேட்டிங் செய்தோம் அதை தான் நாங்கள் பலப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம் எனவும் கூறி இருக்கிறார்.

தப்பு தப்பா இருக்கே

தப்பு தப்பா இருக்கே

அதாவது, சரியாக பேட்டிங் ஆடாவிட்டாலும், விக்கெட்களை விரைவாக இழந்தாலும், நீண்ட பேட்டிங் வரிசையின் ஒன்பது பேட்ஸ்மேன்களும் பேட்டிங் இறங்கி விட்டனர். அவர்களுக்கு பேட்டிங் பயிற்சி கிடைத்து இருக்கிறது என்கிற ரீதியில் கூறி இருப்பது சரியான பேச்சு தானா?

கேலிக்கூத்து ஆகிறதா டி20 அணி?

கேலிக்கூத்து ஆகிறதா டி20 அணி?

இந்திய டி20 அணி கேலிக் கூத்தாகி வருகிறதோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இதே இளம் வீரர்கள் கொண்ட, நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட அணி தான் ஆடியது. அப்போது எல்லாம் சரியாகத் தான் இருந்தது.

சோர்ந்து போவார்கள்

சோர்ந்து போவார்கள்

தென்னாப்பிரிக்கா தொடரை கைப்பற்ற வேண்டிய போட்டியில், திடீரென புது முயற்சி என்று சொதப்பி, தொடரை கோட்டை விட்டுள்ளது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இளம் வீரர்களும் மனதளவில் சோர்ந்து போவார்கள்.

Story first published: Monday, September 23, 2019, 10:14 [IST]
Other articles published on Sep 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+