Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: உபி ரஞ்சி அணி கூட இந்த இந்திய அணியை வீழ்த்திவிடும்.. முகமது கையிப் தாக்கு

மும்பை: இந்திய அணியில் ஒரு திறமையான கேப்டன் இல்லை என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கருத்துத் தெரிவித்துள்ளார். குவஹாத்தியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து அவர் இவ்வாறு கூறினார். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

போட்டி முடிந்த பிறகு, கைஃப் தனது யூடியூப் சேனலில், இந்திய அணி பயிற்சியாளர் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அணிக்கு சரியான கேப்டன் இல்லை என்று பதிலளித்தார்.

Ind vs sa

இது குறித்து பேசிய கைஃப், "உண்மையைச் சொல்லப்போனால், இந்திய அணிக்கு தற்போது ஒரு சரியான கேப்டன் இல்லை. கில் இப்போதுதான் கேப்டன் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இந்தியாவில் அவர் எத்தனை போட்டிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார்? வெஸ்ட் இண்டீஸ் தொடரைப் பற்றி பேச வேண்டாம்."

"அதை ஒப்பிடவும் வேண்டாம். ஒரு உ.பி. ரஞ்சி அணியே அவர்களை தோற்கடித்துவிடும். எனவே, இந்திய அணிக்கு இன்னும் ஒரு திறமையான கேப்டன் கிடைக்கவில்லை என்பதே என் கருத்து. ரிஷப் பந்த் தனது முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன்சி செய்கிறார். அனுபவமற்ற ஒருவரை உலக டெஸ்ட் சாம்பியனுக்கு எதிராக தலைமை தாங்க வைக்கிறீர்கள். கில்லும் ஒரு புதிய கேப்டன். புதிய வீரர்கள் இருப்பதால், ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சகஜம்தான்"

"சுதர்சன் போன்ற வீரர்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆடுகிறார்கள். ஐபிஎல்லில் பிளாட் பிட்ச்களில் ஆடுகிறார்கள். ஜூரலும் பெரும்பாலும் பிளாட் அல்லது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில்தான் விளையாடுகிறார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் அவர்கள் எங்கே விளையாடுகிறார்கள்? நான் இதைத்தான் சொல்ல வருகிறேன்."

"எட்டு அல்லது பத்து விஷயங்கள் தவறாக நடந்திருக்கின்றன. ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுவது கடினம். அவர்கள் சரி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.இங்கிலாந்து டெஸ்ட் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது. நீங்கள் இங்கிலாந்தை மிகைப்படுத்தி மதிப்பிடுகிறீர்கள். அவர்கள் ஒன்றும் தோற்கடிக்க முடியாத அணி அல்ல. பிராட், ஆண்டர்சன் இருவரும் இல்லை."

"புதிய பந்துவீச்சாளர்கள் எல்லோரும் விளையாடினார்கள். அதன்பிறகும் உங்களால் தொடரை வெல்ல முடியவில்லை. அது 2-2 என முடிவடைந்தது. கடைசி டெஸ்டில் நீங்கள் உண்மையில் தோற்றீர்கள். அவர்களுக்கு இன்னும் ஏழு விக்கெட்டுகள் இருந்தன. 70 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. அங்கிருந்து சிராஜ் வந்து அவர்களை அவுட் செய்தார். அவர் இறுதிவரை ஒரு போர்வீரனை போல போராடி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றார். "

"அப்படித்தான் 2-2 ஆனது; இந்திய அணி தொடரை வென்று மீண்டு வரவில்லை. நேர்மையாகச் சொல்லப்போனால், இங்கிலாந்து அணி மிகவும் பலவீனமாக இருந்தது.
இங்கு நீங்கள் பார்த்தால், தென் ஆப்பிரிக்காவிடம் ஜான்சன் போன்ற சரியான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர் உயரமாக இருக்கிறார். மகாராஜ், ஹார்மர் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர்."

"இங்கிலாந்து தொடரிலும் இந்தியா கேட்சுகளை தவறவிட்டது. ஆனால் இங்கிலாந்து மிகவும் மோசமாக இருந்தது. ஜோ ரூட் மற்றும் ஜடேஜா கேட்சுகளை தவறவிட்டதால் சதம் அடித்தார்கள். நான் எத்தனை உதாரணங்களை சொல்ல வேண்டும்? தென் ஆப்பிரிக்கா இதுபோன்ற தவறுகளைச் செய்யாது. நீங்கள் அவர்களுக்குச் சிறிய வாய்ப்பு கொடுத்தாலும், அவர்கள் அதை பயன்படுத்திக் கொள்வார்கள்."

"மார்க்ரமை பாருங்கள்; அவர் சுமார் 9-10 கேட்சுகளை பிடித்தார். அவர்களின் பந்துவீச்சு துல்லியமாக உள்ளது. அவர்களின் பீல்டிங் கூர்மையாக உள்ளது. கேப்டன்சி நன்றாக இருக்கிறது. அவர்கள் டாஸ் வென்று பேட்டிங் செய்தார்கள். மார்க்ரம் ஒன்பது கேட்சுகளை பிடித்தார்; அவர்கள் கேட்சுகளை தவறவிடவில்லை. கடைசி விக்கெட்டுக்கான கேட்சைப் பார்த்தீர்களா? இங்கிலாந்தால் அதை கனவிலும் பிடிக்க முடியாது" என்று முகமது கையிப் கூறினார்.

Story first published: Thursday, November 27, 2025, 14:32 [IST]
Other articles published on Nov 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+