Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: பும்ரா, சூர்யகுமார் இல்ல.. இந்த 32 வயது வீரர் தான் அபாயகரமானவர், முக்கிய வீரர்- பார்த்தீவ் பட்டேல்

மும்பை: இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் காயத்தில் இருந்து திரும்பி இருக்கின்றனர்.

ஒரு நாள் தொடரில் விளையாடாமல் இருந்த பும்ராவும் இந்திய அணிக்கு திரும்பிருக்கின்றார். இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல், சூரியகுமார் யாதவிற்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் வித்தியாசமான கேம் ப்ளான் இருப்பதாக கூறியுள்ளார்.

IND vs SA

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சூரியகுமார் யாதவை விட ஹர்திக் பாண்டியாவின் திட்டம் வித்தியாசமாக இருக்கும். சூரியகுமார் ரிஸ்க் எடுத்து விளையாடுவார். ஆனால் ஹர்திக் பாண்டியா குறைந்த ரிஸ்க் எடுத்து நல்ல ரிசல்ட் பெற முயற்சி செய்வார்.

பெரும்பான்மையான பவுலர்கள் போட்டியின் இறுதி கட்டத்தில் யாக்கர்களை வீச முயற்சி செய்து லெங்த் பாலை வீசிவிடுவார்கள். ஹர்திக் பாண்டியா போன்ற பேட்ஸ்மேன் எதிராக இப்படி சிறு தவறு செய்தாலே, அதனை அவர் சிறப்பாக பயன்படுத்தி சிக்சர் அடித்து விடுவார். இதனால் தான் ஹர்திக் பாண்டியா, அபாயகரமான வீரராக இருக்கின்றார்.

உலக கிரிக்கெட்டில் தற்போது மைதானத்திற்கு நேராக சிக்சர் அடிக்கும் திறமை பல வீரர்களுக்கு இல்லை. ஆனால் ஹர்திக் பாண்டியாவிடம் அந்த திறமை இருக்கின்றது. ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் திறமையில் பந்தை ஸ்விங் செய்து பேட்ஸ்மேனுக்கு வெளியே எடுத்து செல்வார்.

இந்த ஹர்திக் பாண்டியாவின் திறமையை பல எதிரணிகள் குறைத்து மதிப்பிடுகின்றது. அவரிடம் தங்க கை இருக்கின்றது. அதை வைத்து முக்கிய விக்கெட்டுகளை அவர் வீழ்த்துவார். டி20 உலக கோப்பையில் கிளாசன் விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு சாதகமாக போட்டியை மாற்றினார். ஹர்திக் பாண்டியா எப்போதுமே போட்டியில் ஒரு முக்கிய நபராக இருப்பார்.

என்னை கேட்டால் அவர் புதிய பந்தை பயன்படுத்தி பந்து வீச விரும்புவார். ஏனென்றால் நெருக்கடி நிறைந்த ஓவர்கள் வீச அவர் எப்போதுமே ஆசைப்படுவார். இதனால் தான் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் கிடையவே கிடையாது. ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றுவீரர் ஹர்திக் பாண்டியா தான் அவர் உடல் தகுதியை பெற்று விட்டால் நிச்சயமாக உலக கோப்பையில் களமிறங்குவார்.

அந்த தொடரில் இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்த வீரராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் என்று பார்த்திவ் பட்டேல் கூறியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை ஹர்திக் பாண்டியா 98 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா 99 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Tuesday, December 9, 2025, 15:50 [IST]
Other articles published on Dec 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+