Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இந்திய ஒருநாள் அணியில் 3 ஸ்டார் வீரர்களுக்கு வாய்ப்பு.. 2 ஆண்டுக்கு பின் திரும்பிய ருதுராஜ்

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் நவம்பர் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கில் காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறாத நிலையில் அவருக்கு பதில் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த இந்திய அணியில் 4 நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அது யார் என்று தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் ருதுராஜ். சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ், கடைசியாக இந்திய ஒரு நாள் அணியில் விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

Ind vs sa odi

இதே தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ருதுராஜ் விளையாடி இருந்தார். இன்னும் சொல்லப்போனால் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு ருதுராஜ், இந்திய அணியில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் கடந்த தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான தொடரில் ருதுராஜ் அபாரமாக விளையாடினார்.

117, 68, 25 ஆகிய ரன்களை அவர் அடித்த நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதேபோன்று நடுவரிசையில் ஸ்ரேயாஸ் காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் அவருக்கு பதில் ரிஷப் பண்ட்க்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பண்ட் கடைசியாக இந்திய ஒரு நாள் அணியில் இலங்கைக்கு எதிராக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விளையாடி இருந்தார்.

அதன்பின் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக அவர் எந்தவிதமான வெள்ளை நிற பந்து கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. இது பண்ட் நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இதே போன்று இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜா இந்திய ஒரு நாள் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கடைசியாக விளையாடிய ஜடேஜா கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சேர்க்கப்படாமல் இருந்தார்.

தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். கில் காயம் அடைந்துள்ளதால் தற்போது ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெய்ஸ்வால் நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு நாள் போட்டியில் தான் இதுவரை விளையாடி இருக்கிறார்.

Story first published: Sunday, November 23, 2025, 18:33 [IST]
Other articles published on Nov 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+