Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ஒருநாள் தொடரிலும் கம்பீருக்கு சங்கு தான்.. அணியில் இருக்கும் மிகப்பெரிய 2 ஓட்டை

ராஞ்சி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் முதல் ஒரு நாள் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.

Ind vs sa odi

அது மட்டும் இல்லாமல் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. எனினும் இந்திய டெஸ்ட் அணியில் இருப்பது போல் ஒரு நாள் அணியிலும் மைனஸ் பாயிண்ட் இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
அது என்னவென்று பார்க்கலாம்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அதிக அளவு பிளேயிங் லெவனின் இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பார்கள். ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த் என ஐந்து பேர் பேட்டிங் வரிசையில் டாப் எட்டு இடத்தில் இருக்க கூடும். இதன் மூலம் எதிரணியினர் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு ஏதுவான முறையில் யுத்திகளை அமைத்து விக்கெட்டுகளை எடுப்பார்கள் அதிகமான இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

திலக் வர்மாவை நீக்கிவிட்டு அவருக்கு பதில் நிதிஷ் குமார் அட்டையை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்யலாம் இது அதைவிட பெரிய மைனஸ் ஆக தான் மாறும். இதை சரி செய்வதற்காக கம்பீர் வழக்கம் போல் பேட்டிங் வரிசையில் மியூசிக் சேர் கேம் ஆடுவார். இது விளையாடும் வீரர்களுக்கு மட்டுமல்ல பார்க்கும் நமக்கும் தலைவலியை ஏற்படுத்தும்.

இதைத் தொடர்ந்து இந்திய அணியில் தற்போது பெரிய மைனஸ் பாயிண்ட் அனுபவம் இல்லாத மூன்று வேக பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். பொதுவாக இருத்தரப்பு தொடரில் குறைந்த பட்சம் 4 அல்லது 5 வேகப்பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்வார்கள். ஆனால் தற்போது அணியிலே வெறும் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.

ஹர்ஷித்ரானா, ஆர்ஸ்தீப் சிங் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூன்று பேரும் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் இதனால் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு காயம் அடைந்தால் கூட மாற்று வீரர் யாரும் இல்லை. இந்த இடத்தில் சமி போன்ற அனுபவம் வாய்ந்த வீரருக்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம். ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட்டில் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்படும் நிலையில் இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும் இருப்பதால் எவ்வளவு ரன்கள் கொடுக்கப் போகிறார்களோ என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் தற்போது இருக்கின்றது.

Story first published: Saturday, November 29, 2025, 10:24 [IST]
Other articles published on Nov 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+