Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? இந்த 2 வீரர்களும் என்ன பாவம் செய்தார்கள்.. அகர்கருக்கு எதிர்ப்பு

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். எப்போதும் இரு தரப்பு தொடரில் 16 வீரர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆனால் தேர்வுக்குழு 15 வீரர்களை மட்டுமே சேர்த்து இருக்கிறது.

மேலும் ரிஷப் பண்ட், ருதுராஜ், ஜெய்ஸ்வால் மற்றும் ஜடேஜா ஆகிய நான்கு வீரர்களும் தற்போது ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் தேர்வு குழுவினர் இரண்டு தவறு செய்து விட்டதாக விமர்சனம் எழுந்து இருக்கிறது.

Ind vs sa

அதாவது இந்திய அணியில் தற்போது கே எல் ராகுல், ரிஷப் பந்த் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். இதை தவிர மூன்றாவது விக்கெட் கீப்பராக துருவ ஜுரல் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் துருவ் ஜூரலை விட இந்திய அணியின் நட்சத்திர வீரரான சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்.

ஆனால் அந்த விஷயத்தில் தேர்வு குழு தவறு செய்துவிட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு இரண்டு ஆண்டுகளாகவே ஒரு நாள் அணியில் இடம் தரப்படவில்லை. இதுவரை 14 இன்னிங்சில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சனுக்கு சராசரி மட்டும் 56 என்ற அளவில் இருக்கிறது. இதே தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் தான் சஞ்சு சாம்சன் கடந்த முறை சதம் அடித்து ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார்.

இப்படி இருக்கும் போது சாம்சன் ஏன் மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் மூன்று பிரத்யேக வேக பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். ஆர்ஸ்தீப், கிருஷ்ணா மற்றும் ஹர்ஷித்ராணா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

இது போதுமானதாக இல்லை என்றும் 16 வது வீரராக முகமது சமியை சேர்த்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளனர். சமி ஏற்கனவே தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்துள்ள நிலையில் ஒருநாள் அணியிலும் ஏன் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த இரண்டு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ள ரசிகர்கள், அஜித் அகார்கர், கம்பீர் ஆக்கியோர் மனசாட்சி இன்றி செயல்படுவதாகவும் அணியின் நலனை விட தங்களது சொந்த நலத்திற்காக தான் செயல்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Sunday, November 23, 2025, 19:01 [IST]
Other articles published on Nov 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+