For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: ரிஷப் பண்ட் மீது நடவடிக்கை எடுக்க போகும் கம்பீர்.. இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடையாது

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் வரும் நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் திரும்பி இருக்கிறார். இவர் கடைசியாக 2024 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் விளையாடினார்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பண்ட், ஒரு நாள் அணியில் திரும்பி உள்ளதால் அவர் பேட்டிங்கில் எந்த வரிசையில் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு இழந்தது. இந்த சூழலில் கில் இல்லாததால் கேப்டனாக கே எல் ராகுல் சேர்க்கப்பட்டிருக்கிறார். ராகுல்தான் ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார். இதனால் ரிஷப் பண்ட், இந்திய ஒரு நாள் அணியில் சாதாரண வீரராக தான் இடம்பெறுவாரா? இல்லை விக்கெட் கீப்பராக செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.

Rishabh Pant

இந்த தருணத்தில் தான் ஏற்கனவே ராகுல் விக்கெட் கீப்பராக இருப்பதால் பண்ட்க்கு அணியில் இடம் தர வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு கேப்டன் பதவியை கம்பீர் வழங்கினார்.

ஆனால் பெரிய அளவு பேட்டிங்கில் பண்ட் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் கம்பீர் சூழலை பொருத்தி பொறுமையாக விளையாடுங்கள் என்று கூறியும், பந்த் தேவையில்லாமல் அதிரடி காட்டி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பண்ட் மீது கோபத்தில் உள்ள கம்பீர், அவருக்கு ஒரு நாள் அணியில் இடம் தர மாட்டேன் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ரிஷப் பன்ட் ஒரு நாள் தொடரில் விளையாட மாட்டார். அவருக்கு பதில் ருதுராஜ் நடுவரிசையில் நான்காவது வீரராக விளையாடலாம் என தெரிகிறது. இல்லை என்றால் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். அதுவும் இல்லை என்றால் ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேனான நிதிஷ்குமார் ரெட்டிக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்க கம்பீர் முடிவெடுத்து இருக்கிறார்.

இதனால் ஒருநாள் அணியில் பண்ட் இடம் பிடித்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வல்லுநர்கள், நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதில் ரிஷப் பண்டையே அணியில் சேர்க்க வேண்டும். இதன் மூலம் பேட்டிங் வரிசை மேலும் பலமடையும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Saturday, November 29, 2025, 12:44 [IST]
Other articles published on Nov 29, 2025
English summary
Ind vs Sa odi series- Rishabh Pant might not get chance in Playing xi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+