Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இன்னும் 1 சதம் தான் தேவை.. 9 சாதனைகள் படைக்க போகும் விராட் கோலி.. தென்னாப்பிரிக்க தொடரில் வாய்ப்பு

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு மாதத்திற்கு பின் திரும்புகிறார். 37 வயதான விராட் கோலி கடைசியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடினார்.

இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனாலும், கடைசி ஒரு நாள் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 74 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைக்க வாய்ப்பு இருக்கிறது.

Virat kohli

அது என்னவென்று தற்போது பார்க்கலாம். விராட் கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஃபார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறுவார். இதேபோன்று அடுத்த 23 இன்னிங்ஸில் 327 ரன்கள் விராட் கோலி அடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28 ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

இதேபோன்று தென்னாப்பிரிக்கா தொடரில் மொத்தம் அவர் 344 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தை பிடிப்பார். இதேபோன்று மேலும் ஒரு சதம் அடித்தால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 ஒருநாள் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை அவர் பெறுவார்.

இதேபோன்று தென்னாப்பிரிக்கா தொடரில் இரண்டு அரை சதம் விராட் கோலி அடித்தால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக 50 ரன்கள் மேல் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். விராட் கோலி வெற்றி பெறும் போட்டியில் 14 ரன்கள் எடுத்தால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் போட்டியில் ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மேலும் ஒரு அரைசதம் அடித்தால் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதேபோன்று தென்னாப்பிரிக்க தொடரில் ஒரு அரைசதம் அடித்தால் சொந்த மண்ணில் 100 முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற பெருமையை பெறுவார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில் விராட் கோலி அந்தப் போட்டியின் 16 ரன்கள் எடுத்தால் சேனா நாடுகளுக்கு எதிராக வெற்றி பெறும் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைக்கும்.

Story first published: Saturday, November 29, 2025, 11:18 [IST]
Other articles published on Nov 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+