Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தப்பு பண்ணிட்டீங்களே! அஸ்வின் மாதிரி உஷாரா இருந்திருக்க வேண்டாமா? டெஸ்ட் மன்னனுக்கு நேர்ந்த கதி!

Recommended Video

அஸ்வின் மாதிரி உஷாரா இருந்திருக்க வேண்டாமா?.. டெஸ்ட் மன்னனுக்கு நேர்ந்த கதி!-வீடியோ

விசாகப்பட்டினம் : இந்திய அணியில் டெஸ்ட் மன்னனாக வலம் வரும் புஜாரா கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து ரன் குவிக்காமல் சொதப்பி வருகிறார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் புஜாரா சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பின் நீண்ட இடைவெளிக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற புஜாரா, ஒரு விஷயத்தில் உஷாராக இல்லாமல் இருந்ததே இந்த பார்ம் அவுட்டுக்கு காரணம் என கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளி

இந்திய அணி ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதன் பின் ஆகஸ்ட் மாதம் தான் அடுத்த டெஸ்ட் தொடர் திட்டமிடப்பட்டு இருந்தது.

உள்ளூர் போட்டிகளே இல்லை

உள்ளூர் போட்டிகளே இல்லை

இந்த நீண்ட இடைவெளியில் ஐபிஎல் தொடர், உலகக்கோப்பை தொடர் ஆகியவை நடைபெற்றன. இந்திய அளவிலான முதல் தர போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. புஜாரா ஐபிஎல் தொடரிலும் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

அஸ்வின், ரஹானே திட்டம்

அஸ்வின், ரஹானே திட்டம்

புஜாரா போலவே அஸ்வின், ரஹானே ஆகியோரும் டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வருகின்றனர். அவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று முடித்த பின் இங்கிலாந்து உள்ளூர் கவுன்டி தொடரில் ஆடச் சென்றனர்.

கவுன்டி கலக்கல்

கவுன்டி கலக்கல்

கவுன்டியில் கலக்கிய அஸ்வின் விக்கெட் வேட்டை நடத்தினார். தன் பார்மை மீண்டும் நிரூபித்து இருந்தார். ரஹானே சில போட்டிகளில் சொதப்பினாலும் ஒரீரு சதம், அரைசதம் அடித்து இருந்தார்.

ஒரு சில டி20 போட்டிகள்

ஒரு சில டி20 போட்டிகள்

ஆனால், புஜாரா கவுன்டி போட்டிகளில் பங்கேற்கவில்லை. பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்திய அளவிலான உள்ளூர் டி20 போட்டிகளில் ஆடினார். அதன் பின் நீண்ட ஓய்வில் இருந்தார் அவர். அஸ்வின், ரஹானே போல தொடர்ந்து கிரிக்கெட் ஆட பெரிய முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. அது தான் இப்போது சிக்கலாக மாறி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

உலகக்கோப்பை தொடருக்குப் பின் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். அந்த தொடரில் அவர் எடுத்த ரன்கள் 2, 25, 6, 27 மட்டுமே. அடுத்து சொந்த மண்ணில் ஆட இருப்பதால் தன் பார்மை மீட்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

சொந்த மண்ணில் சொதப்பல்

சொந்த மண்ணில் சொதப்பல்

இந்த நிலையில், இந்திய மண்ணில் நடைபெறும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் களமிறங்கிய புஜாரா வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ரோஹித், மாயங்க் அபாரம்

ரோஹித், மாயங்க் அபாரம்

முதல் டெஸ்டில் ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 300 ரன்களுக்கும் மேல் குவித்த நிலையில் தான் புஜாரா களமிறங்கினார். அவருக்கு எந்த அழுத்தமும் இல்லை. எனினும், புதிய பந்தில் பிலாண்டர் வீசிய ஸ்விங் பந்துக்கு இரையானார்.

ஒரு அரைசதம் போதும்

ஒரு அரைசதம் போதும்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்டில் சொதப்பினாலும், புஜாரா பார்ம் அவுட் என யாரும் கூறவில்லை. ஆனால், தற்போது இந்திய மண்ணிலும் தடுமாறி கவலை அளித்து வருகிறார். இந்த டெஸ்ட் தொடரில் அடுத்து வரும் போட்டிகளில் ஒரே ஒரு அரைசதம் அடித்தால் கூட பார்ம் அவுட் என்ற பேச்சை புஜாரா தவிர்க்கலாம்.

Story first published: Thursday, October 3, 2019, 15:26 [IST]
Other articles published on Oct 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+