For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெறி ஏத்தி விட்ட கோலி.. திட்டிக் கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்கள்.. கேப்டன் பஞ்சாயத்து.. வைரல் வீடியோ!

Recommended Video

Rabada and de Kock gets involved in a heated on-field spat

புனே : இரண்டாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணியை புரட்டி எடுத்தது இந்தியா. விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். அதனால், மனம் வெறுத்த நிலையில் இருந்த தென்னாப்பிரிக்க வீரர்கள் குறிப்பிட்ட சம்பவத்தால் தங்களுக்குள் திட்டிக் கொண்டார்கள்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்டில் வென்றால் தான் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தென்னாப்பிரிக்க அணியால் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

ஆரம்பமே அதிர்ச்சி

ஆரம்பமே அதிர்ச்சி

இந்த நிலையில் இரண்டாம் போட்டியில் ஆடிய அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. டாஸில் முதல் போட்டி போலவே தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்கா. இந்தியா டாஸ் வென்ற உடன் பேட்டிங் தேர்வு செய்தது.

ரசிகர்கள் புலம்பல்

ரசிகர்கள் புலம்பல்

அப்போதே தென்னாப்பிரிக்க அணி இந்தப் போட்டியில் செமயாக அடி வாங்கப் போகிறது என தென்னாப்பிரிக்க ரசிகர்களே புலம்பத் துவங்கி விட்டார்கள். இந்தியாவும் முதல் இன்னிங்க்ஸில் வெளுத்து வாங்கியது.

வெறுத்துப் போன தென்னாப்பிரிக்கா

வெறுத்துப் போன தென்னாப்பிரிக்கா

மாயங்க் அகர்வால் 108, புஜாரா 58, ரஹானே 59, ஜடேஜா 91, விராட் கோலி 254 என ரன் குவித்து தென்னாப்பிரிக்க அணியை நிலைகுலைய வைத்தனர். குறிப்பாக ஜடேஜா - விராட் கோலி கூட்டணியையும் பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் வெறுத்துப் போய் இருந்தனர்.

அந்த மோதல் சம்பவம்

அந்த மோதல் சம்பவம்

அப்போது தான் அந்த மோதல் சம்பவம் நடந்தது. 123வது ஓவரின் போது கோலி சதம் அடித்த நிலையில் பேட்டிங் செய்து வந்தார். வேகப் பந்துவீச்சாளர் ரபாடா அந்த ஓவரை வீசினார்.

ரபாடா வீண் வேலை

ரபாடா வீண் வேலை

அந்த ஓவரின் முதல் பந்தை சந்தித்த கோலி, பந்தை அடித்து ரபாடாவிடமே அனுப்பினார். பந்தை பிடித்த ரபாடா ரன் அவுட் செய்வது பாவனை செய்து தேவையே இல்லாமல் பந்தை விக்கெட் கீப்பர் டி காக் வசம் எறிந்தார்.

தவறவிட்ட டி காக்

தவறவிட்ட டி காக்

டி காக் பந்தை ரபாடா எறிவார் என்பதை எதிர்பார்க்கவில்லை. ரபாடாவிடம் பந்து இருப்பதால் அடுத்த பந்துக்கு தன்னை தயார் படுத்தி வந்தார் டி காக். அதனால், ரபாடா எறிந்த பந்தை அவரால் பிடிக்க முடியவில்லை.

திட்டிக் கொண்ட வீரர்கள்

திட்டிக் கொண்ட வீரர்கள்

இதை உணர்ந்த விராட் கோலி வேகமாக ஒரு ரன் ஓடி எடுத்தார். அதைக் கண்ட ரபாடா கடுப்பானார். டி காக்கை பார்த்து அவர் கோபமாக திட்டினார். துணை கேப்டனான டி காக் அவரை திருப்பி ஏசினார்.

யோசித்து செயல்பட வேண்டும்

யோசித்து செயல்பட வேண்டும்

டி காக் தலையில் கையை வைத்து பேசியதை பார்த்த போது யோசித்து செயல்பட வேண்டும் என கூறியதைப் போல தான் இருந்தது. அதன் பின்னும் இந்த சண்டை ஓயவில்லை.

கேப்டன் சமாதானம்

அடுத்த ஓவரின் போது டி காக் அருகே பீல்டிங் செய்த ரபாடா அவரை திட்டினார். டி காக் திருப்பி பேச சிறிய பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கேப்டன் டு ப்ளேசிஸ் ஓடி வந்து தட்டிக் கொடுத்து சமாதானம் செய்து வைத்தார்.

கோலி தான் காரணம்

கோலியின் ரன் குவிப்பால் வெறுப்பில் இருந்த ரபாடா, தன் வெறுப்பை காட்டவே பந்தை எறிந்தார். அதை எதிர்ப்பாராமல் டி காக் பந்தை தவறவிட்டார். தென்னாப்பிரிக்க வீரர்கள் மோதிக் கொண்டதற்கு கோலியின் ரன் குவிப்பு தான் முக்கிய காரணம்.

Story first published: Friday, October 11, 2019, 21:52 [IST]
Other articles published on Oct 11, 2019
English summary
IND vs SA : Rabada - De Cock clash for a misfield as Captain had to intervene and stop them. SA players lost their energy because of Kohli’s double century and that could be the reason for this incident.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X