Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஹானே கதை முடிந்தது.. இந்திய அணிக்கு திரும்பிய 3 வீரர்கள்.. டெஸ்ட் அணியில் ட்விஸ்ட் வைத்த பிசிசிஐ!

டெல்லி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதன்பின் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

IND vs SA: Rahane dropped and Bumrah, KL Rahul and Shreyas Iyer comeback into into the Test team for the South Africa Series

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடிய சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக செயல்பட்ட அஜிங்கியா ரஹானே தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் பேக் அப் விக்கெட் கீப்பரான கேஎஸ் பரத் நீக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் துணை கேப்டனாக பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்படாத ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் தொடரில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் கடந்த முறை தென்னாப்பிரிக்கா தொடரில் அசத்திய ஷர்துல் தாக்கூர் அணிக்கு திரும்பியுள்ளார். இதன் மூலமாக இந்திய அணியில் புஜாரா மற்றும் ரஹானேவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் உள்ளனர். அதேபோல் 3வது வரிசையில் சுப்மன் கில்லை இந்திய அணி சோதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது,

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், இஷான் கிஷன்.

Story first published: Thursday, November 30, 2023, 21:02 [IST]
Other articles published on Nov 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+