Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ரவி சாஸ்திரி பற்ற வைத்த நெருப்பு.. சாம்சனுக்காக களமிறங்கும் ரசிகர்கள்.. கம்பீருக்கு நெருக்கடி

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று தொடரை மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து அளித்தார்.

இவருடைய ஆட்டத்தால் தான் இந்திய அணி இன்று பேட்டிங்கில் ஆரம்பத்திலிருந்த, கடைசி வரை சும்மா டென் டவுஷன் வாலா பட்டாசு போல் இடைவிடாமல் வெடித்து சிதறியது. இதுவே கில் இருந்திருந்தால், அவர் முதல் ஓவரிலே ஆட்டமிழந்திருப்பார். இதனால் மற்ற பேட்டர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.

sanju samson

இந்த நிலையில், சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை வர்ணனை செய்து கொண்டிருந்த ரவி சாஸ்த்ரி, இந்த வீரரை ஏன் அணியில் சேர்க்கவில்லை. யாரேனும் காயமடைந்தால் தான் அணியில் சேர்ப்பீர்களா என்று கேள்வி கேட்டார். தற்போது, ரவி சாஸ்திரியின் இந்த நேரலை வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்த்து பலரும், ரவி சாஸ்திரி கேள்விக்கு பதில் சொல்லுங்க கோட்ச் சார் என்று பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், சிலர் கில் இல்லாததால் இந்தியா இந்த ஆட்டத்தில் வென்றதாகவும் இல்லை என்றால் தோற்றுஇருப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் கில்,டி20 உலககோப்பை அணியில் இருக்க கூடாது என்றும், சாம்சன் தான் அணியில் தொடக்க வீரராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் தனது திறமையை காட்டி இருப்பது, கம்பீருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டது. மேலும் இந்த தொடரில் கில் விளையாடி சேர்த்த ரன்களை விட ஒரே போட்டியில் குறைந்த பந்தில் அதிக ரன் சாம்சன் சேர்த்து விட்டதாகவும் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றர்.

Story first published: Saturday, December 20, 2025, 7:30 [IST]
Other articles published on Dec 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+