நீ ஒன்றும் குழந்தை கிடையாது.. ஷர்துல் தாக்கூரை துவம்சம் செய்த ரவி சாஸ்த்ரி.. இவரை கொண்டு வாங்க!
மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் வேகப்பந்துவீச்சாளர்களின் மட்டமான செயல்பாடு தான். அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்காவை 400 ரன்கள் அடிக்க விட்டதெல்லாம் யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது.
பும்ரா, சிராஜ் ஆகியோர் ஒரு அளவு தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை கட்டுப்படுத்த முயன்றாலும் மற்ற இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களான ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் வாரி வழங்கும் வள்ளலாக மாறிவிட்டார்கள்.

இந்த நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஷர்துல் தாக்கூரை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர் இந்திய அணியில் தற்போது வேகப்பந்து வீச்சில் போதிய அனுபவம் இல்லை என்பதை இந்த தோல்வி காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும் சமியை இந்தியா இந்த தொடரில் நிச்சயம் தவற விட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி, ஷர்துல் தாக்கூர் ஒன்றும் குழந்தை அல்ல. இந்தியாவின் நான்காவது வேகப்பந்துவீச்சாளர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று சாடி இருக்கிறார் .மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் நல்ல வீரராக இருந்திருந்தால் இந்நேரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். ஆர்ஸ்தீப் சிங்கை இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பயன்படுத்தி பார்த்திருக்கலாம் என்றும் ரவி சாஸ்திரி யோசனை கூறியுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளிலும் இளம் வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? அவர்கள் எவ்வளவு ஓவர்கள் வீசுகிறார்கள் என்பதை பார்த்து தேர்வு செய்ய வேண்டும் என்றும் ரவி சாஸ்திரி வலியுறுத்தி உள்ளார். தென்னாப்பிரிக்க மண்ணில் ஆர்ஸ்தீப் ஒரு நாள் கிரிக்கெட்டில் பந்தை நன்றாக ஸ்விங் செய்ததாக குறிப்பிட்ட ரவி சாஸ்திரி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தால் நிச்சயம் இந்தியாவுக்கு தேவைப்படும் வீரராக மாறி இருப்பார் என்று கூறியுள்ளார்.
Story first published: Friday, December 29, 2023, 23:14 [IST]
Other articles published on Dec 29, 2023


Click it and Unblock the Notifications