Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: "வேலை போய்விடும்.. ஜாக்கிரதை.. இனியாவது இதை செய்யுங்க".. கம்பீரை எச்சரித்த ரவி சாஸ்திரி

மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு, முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மிக முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார். "செயல்பாடு சரியில்லை என்றால், எப்போது வேண்டுமானாலும் வேலை பறிபோகும்" என்று அவர் கம்பீரை வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே சொந்த மண்ணில் இரண்டு முறை 'ஒயிட்வாஷ்' (நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்கள்) டெஸ்ட் தோல்விகளைச் சந்தித்த ஒரே பயிற்சியாளர் என்ற மோசமான சாதனையை கம்பீர் படைத்துள்ளார். இதனால் அவர் மீது பிசிசிஐ மற்றும் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

IND vs SA Ravi Shastri Issues Stern Warning to Gautam Gambhir Cites Poor Home Test Record

"பதவி நிரந்தரம் இல்லை" - சாஸ்திரி வார்னிங்

இந்த இக்கட்டான சூழல் குறித்துப் பேசிய ரவி சாஸ்திரி, "உங்களின் செயல்பாடு மோசமாக இருந்தால், நீங்கள் நிச்சயம் பணியிலிருந்து நீக்கப்படுவீர்கள். இதுதான் எதார்த்தம். அதனால், இத்தகைய நேரங்களில் நீங்கள் மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து கம்பீருக்கு அவர் ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார். "வீரர்களுடன் தகவல் தொடர்பு மற்றும் அவர்களை நிர்வகிக்கும் திறன் ஆகியவை மிக மிக முக்கியம். இதைச் சரியாகச் செய்தால் மட்டுமே வீரர்களை வெற்றிக்குத் தயார்படுத்தி ஊக்கப்படுத்த முடியும். அதைத்தான் நாங்கள் செய்தோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் செய்யும் வேலையை அழுத்தமாக எடுத்துக்கொள்ளாமல், அதை ரசித்துச் செய்ய வேண்டும்," என்று சாஸ்திரி அறிவுரை கூறியுள்ளார்.

கம்பீரின் ஏற்ற இறக்கங்கள்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றிகளையும், படுதோல்விகளையும் சந்தித்துள்ளது.

வெற்றிகள்: 2025 ஆசிய கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றைத் தோல்வியே சந்திக்காமல் வென்று கொடுத்துள்ளார்.

தோல்விகள்: ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் வாங்கிய 'ஒயிட்வாஷ்' அடிகள் அணியின் நற்பெயரைக் குலைத்துள்ளன. மேலும், பத்து ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. அதே போல சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் இலங்கை மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது.

இதற்கிடையில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் கம்பீருக்கு சுமுகமான உறவு இல்லை என்ற வதந்திகளும் பரவி வருகின்றன. 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடர் வரை கம்பீரின் பதவி நீடிக்குமா அல்லது அதற்கு முன்பே நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வியும் உள்ளது.

Story first published: Wednesday, December 3, 2025, 11:27 [IST]
Other articles published on Dec 3, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+