Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை குடிச்சுட்டு பாருங்க.. வானம் பிங்க் கலர்ல இருக்கும்! காபியும், கையுமாக சிக்கிய ரவி சாஸ்திரி!

தரம்சாலா : ரவி சாஸ்திரி ட்விட்டரில் பகிர்ந்த புகைப்படம் ஒன்றை பார்த்து ரசிகர்கள் செமயாக அவரை கலாய்த்து வருகிறார்கள்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன முதல் டி20 போட்டி தரம்சாலாவில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக மழை பெய்து வருவதால் வீரர்கள் முழு வீச்சில் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை.

மழைக்கு நடுவே கையில் காபி

மழைக்கு நடுவே கையில் காபி

இந்த நிலையில், மலைகள் நிரம்பிய தரம்சாலாவின் இயற்கை சூழ்நிலையில், மழைக்கு நடுவே கையில் காபி கோப்பை வைத்துக் கொண்டு இருக்கிறார் ரவி சாஸ்திரி. அருகில், துவக்க வீரர் ஷிகர் தவான் கையை கட்டிக் கொண்டு இருக்கிறார்.

அந்த பதிவு

அந்த பதிவு

இந்த புகைப்படத்தை பகிர்ந்த ரவி சாஸ்திரி, தன் பதிவில் இப்படி குறிப்பிட்டு இருக்கிறார் - "காபி, மலைகள், கிரிக்கெட் மற்றும் பேச்சு, ஷிகர் தவானுடன்". இந்த பதிவை தான் ரசிகர்கள் கலாய்த்து இருக்கிறார்கள்.

இரண்டு விஷயங்கள்

இந்த புகைப்படத்தில் கலாய்க்க இரண்டு விஷயங்கள் ரசிகர்களுக்கு கிடைத்து இருக்கிறது. ரசிகர்களின் ஒரு கண் ரவி சாஸ்திரி வைத்திருக்கும் காபி கோப்பை மேலும், மற்றொரு கண் கையை கட்டிக் கொண்டு இருக்கும் தவான் மீதும் பதிந்துள்ளது. இந்த இரண்டையும் தான் கலாய்த்து வருகிறார்கள்.

தவான் ஓய்வு

தவான் ஓய்வு பற்றி அவரிடம் கேட்டு வருகிறாரோ? என ஒருவர் கிண்டல் அடித்து இருக்கிறார். காரணம், ஷிகர் தவானை அணியில் ஓரங்கட்டுவதாக ஒரு பேச்சு உள்ளது. டெஸ்ட் அணியிலும் தவானை நீக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன நடக்கும்?

தவானை இன்று நடைபெற உள்ள முதல் டி20யில் வெளியே உட்கார வைத்து விடுவார்கள் என்று கூறுகிறார் மற்றொரு ரசிகர். அதைப் பற்றித் தான் அவரிடம் பேசிக் கொண்டு இருக்கிறாரோ ரவி சாஸ்திரி?

பாட்டில் எங்கே?

பாட்டில் எங்கே என ஒருவர் கேட்டுள்ளார். பல முறை ரவி சாஸ்திரி பாட்டிலும், கையுமாக புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதை அடுத்து ரசிகர்கள் அவரை குடிகாரர் என்றே முடிவு செய்து கலாய்த்து வருகிறார்கள்.

அது காபி இல்லை

அது காபியா? என கேட்டு ஒருவர் சிரித்துள்ளார். சிலர் அது காபி இல்லை, காபி கலவை கொண்ட விஸ்கி எனவும் கலாய்த்து இருக்கின்றனர். ஆக, மொத்தத்தில் அவர் அருந்துவது மது தான் என உறுதியாக உள்ளனர்.

கற்பனை

ரவி சாஸ்திரி - தவான் என்ன பேசிக் கொண்டு இருப்பார்கள்? இதோ ஒரு கற்பனை காட்சியை கூறி இருக்கிறார் ஒருவர்.

தவான் : சார், வானம் பிங்க் நிறத்தில் இல்லை. நீல நிறத்தில் தான் உள்ளது.

ரவி சாஸ்திரி : இந்த காபி விஸ்கியை குடித்து பாருங்கள். அப்புறம் வானம் பிங்க் நிறத்தில் உள்ளதா என பாருங்கள்.

Story first published: Sunday, September 15, 2019, 14:19 [IST]
Other articles published on Sep 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+