Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: "தூக்கி எறியறது ஈசி.. ஆனா.." பிரசித் கிருஷ்ணாவுக்காக பேசிய அஸ்வின்.. தரமான கம்பேக்

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆரம்பத்தில் ரன்களை வாரி வழங்கினாலும், பின்னர் அசுரத்தனமாகத் திரும்பி வந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் பிரசித் கிருஷ்ணாவை, இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை வாரி வழங்கி இருந்தார். அந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், அதற்கு பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சு தான் காரணம் என்ற வங்கதேசம் விமர்சனம் எழுந்தது.

IND vs SA Ravichandran Ashwin Praises Prasidh Krishna s Quality Comeback says Critics Who Write Off Players Easily

விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் தடுமாறிய பிரசித் கிருஷ்ணா, பின்னர் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இது குறித்து அஸ்வின் தனது 'X' தளத்தில் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு குறித்து அஸ்வின் பதிவிட்டுள்ளதாவது: "ஒருவர் மோசமான நாட்களில் இருக்கும்போது, அவரை விமர்சிப்பதும், அணியிலிருந்து ஓரங்கட்டுவதும் மிகவும் சுலபம். ஆனால் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால், அவரது உண்மையான தரம் நிச்சயம் வெளியே வரும் என்பதை பிரசித் கிருஷ்ணா நிரூபித்துள்ளார்."

"அவர் தனது ரன்-அப் வேகம் மற்றும் ஆட்டத்தின் சூழலை இன்னும் கொஞ்சம் புரிந்து கொண்டால், இந்த நிலையில் அவரால் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட முடியும்" என்று அஸ்வின் ஆதரவாகப் பதிவிட்டுள்ளார். மேலும், 4 விக்கெட் எடுத்த குல்தீப் யாதவையும் அவர் பாராட்டியுள்ளார்.

ஆரம்பத்தில் அடி.. இறுதியில் அதிரடி!

இப்போட்டியில் பிரசித் கிருஷ்ணாவின் முதல் ஸ்பெல் படுமோசமாக இருந்தது. குயின்டன் டி காக் அவரை வெளுத்து வாங்கினார். ஒரு ஓவரில் மட்டும் 18 ரன்களை வாரி வழங்கினார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், கேப்டன் ராகுல் மீண்டும் அவரை அழைத்தபோது, பிரசித் கிருஷ்ணா விஸ்வரூபம் எடுத்தார்.

நன்றாக ஆடிக்கொண்டிருந்த மேத்யூ பிரீட்ஸ்கேவை எல்பிடபிள்யூ ஆக்கினார். அடுத்ததாக கேப்டன் மார்க்ரம் விக்கெட்டைத் தூக்கினார். இறுதியாக சதம் அடித்த குயின்டன் டி காக்கை கிளீன் போல்ட் செய்து ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார்.

இந்த இரண்டாவது ஸ்பெல்லில் அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இறுதியில் 9.5 ஓவர்கள் வீசி 66 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

Story first published: Sunday, December 7, 2025, 8:15 [IST]
Other articles published on Dec 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+