Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பண்டியாவுக்கு டெஸ்ட் டீமில் இடம் இல்லையா? பரபரக்கும் ரசிகர்கள்.. ரகசியம் இது தான்!

Recommended Video

IND vs SA : Reason behind Hardik Panyda dropped in team India test squad

மும்பை : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அதிரடி ஆல் - ரவுண்டர் ஹர்திக் பண்டியா சேர்க்கப்படவில்லை.

ஹர்திக் பண்டியா டெஸ்ட் அணியில் நிரந்தர வீரராக தானே வலம் வந்தார். அதிலும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அவசர நேரத்தில் கேப்டன் கோலி தன் வலது கரம் போல நம்பும் வீரர் அவர் தான்.

அவருக்கே அணியில் இடம் இல்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அணிக்கு தேவை

அணிக்கு தேவை

ஹர்திக் பண்டியா பற்றி கோலி, ரவி சாஸ்திரி பேட்டிகளில் குறிப்பிடும் போது கூட அவர் நிச்சயம் அணிக்கு தேவை. அவர் இல்லாமல் அணியே இல்லை என்கிற ரீதியில் தான் பேசுவார்கள். அப்புறம் ஏன் பண்டியா டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை?

ஆசிய கோப்பையில் காயம்

ஆசிய கோப்பையில் காயம்

ஹர்திக் பண்டியா கடைசியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடி இருந்தார். அதன் பின்பு ஆசிய கோப்பை போட்டியின் போது முதுகில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின், மீண்டு வந்த அவர் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து பங்கு பெற்று வந்தார்.

மீண்டும் காயம்

மீண்டும் காயம்

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு ஐபிஎல் தொடர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றார். அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

டி20 தொடரில் பண்டியா

டி20 தொடரில் பண்டியா

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார். அடுத்து டெஸ்ட் அணி அறிவிப்பிலும் அவர் பெயர் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பெயர் இடம் பெறவில்லை.

அணி மாற்றம்

அணி மாற்றம்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ஆடிய அதே அணியில் ராகுல், உமேஷ் யாதவ் மட்டும் நீக்கப்பட்டு, ஷுப்மன் கில் மட்டும் அணியில் புதிதாக சேர்க்கப்பட்டு இருந்தார். பண்டியா எங்கே? என ரசிகர்கள் கேட்கத் துவங்கினர்.

உடற்தகுதியுடன் இருக்கிறார்

உடற்தகுதியுடன் இருக்கிறார்

அவருக்கு காயம் இருந்தால் அவரை டி20 அணியில் சேர்த்து இருக்க மாட்டார்கள். எனவே, உடற்தகுதியுடன் இருக்கும் அவரை ஏன் டெஸ்ட் அணியில் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்ன ரகசியம்?

என்ன ரகசியம்?

டி20 ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் ஹர்திக் பண்டியாவை 2020 டி20 உலகக்கோப்பை தொடர் வரை மேற்கொண்டு காயம் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு திட்டம் இருப்பதாக ஒரு தகவல் வலம் வருகிறது. ஆனால், இதை வெளிப்படையாக கூறவில்லை தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்.

ஏன் சேர்க்கப்படவில்லை?

ஏன் சேர்க்கப்படவில்லை?

நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பிரசாத்திடம் பண்டியா ஏன் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் சம்பந்தம் இல்லாமல் பதில் அளித்தார்.

எங்கே ஆட வைப்பது?

எங்கே ஆட வைப்பது?

பண்டியாவை எங்கே ஆட வைப்பது? அவரை ஆட வைக்க எங்கே இடம் இருக்கிறது? இந்திய சூழ்நிலையில் அவர் சரியான தேர்வாக இருக்க மாட்டார் எனக் கூறி மழுப்பினார். இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள ஹர்திக் பண்டியா 532 ரன்களும், 17 விக்கெட்களும் எடுத்துள்ளார்.

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள்

வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள்

அவர் ஆடிய 11 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டி தான் இந்திய மண்ணில் ஆடி உள்ளார். மற்ற போட்டிகள் அனைத்தும், இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ஆடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 13, 2019, 18:34 [IST]
Other articles published on Sep 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+