For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி இதுக்கு மேல ஊரே சிரிச்சுடும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட வீரர்!

Recommended Video

ராகுலுக்கு முதலில் வாய்ப்பு கொடுப்பார் கோலி.. அப்புறம் தான் ரோஹித்!

மும்பை : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அன்ஹா அணியில் துவக்க வீரர் கேஎல் ராகுல் நீக்கப்பட்டார்.

என்னாது.. கோலியின் அன்புக்கு உரிய பாசத்துக்கு உரிய ராகுல் நீக்கப்பட்டாரா? என ரசிகர்கள் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஒரு சேர ஆழ்ந்தனர்.

கேப்டனின் ஆசி பெற்ற வீரரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்களா? என்னப்பா இது? கோலி எப்படி இதற்கு சம்மதித்தார்? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

கேப்டன் கோலியின் ரைட் ஹேண்டுக்கே டெஸ்ட் டீமில் இடம் இல்லையா? பரபரக்கும் ரசிகர்கள்.. ரகசியம் இது தான்கேப்டன் கோலியின் ரைட் ஹேண்டுக்கே டெஸ்ட் டீமில் இடம் இல்லையா? பரபரக்கும் ரசிகர்கள்.. ரகசியம் இது தான்

ஊரே சிரித்து விடும்

ஊரே சிரித்து விடும்

ஆனால், கேப்டன் கோலி நினைத்தாலும், வேறு யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாத நிலைக்கு தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டார் ராகுல். அது தான் உண்மை. இதற்கு மேலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால், ஊரே சிரித்து விடும் என்ற நிலை தான் உள்ளது.

வரிசையாக ஏழு அரைசதம்

வரிசையாக ஏழு அரைசதம்

ராகுல் கடந்த 2017 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஏழு டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் வரிசையாக ஏழு அரைசதம் அடித்து மிரட்டினார். யாருப்பா இவர்? என எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

சிறிய குறை

சிறிய குறை

கேப்டன் விராட் கோலியின் நட்பு வட்டத்திற்குள் நுழைந்தார். எல்லாமே நன்றாக சென்றது. ஆனால், ஒரே ஒரு சிறிய குறை அவர் மனதை அரித்தது. அரைசதமாக அடித்து தள்ளுகிறோம். அது ஏன் சதமாக மாறவில்லை என்பது தான்.

நம்பிக்கை இழந்தார்

நம்பிக்கை இழந்தார்

வளர்ந்து வரும் வீரருக்கு இந்த எண்ணம் தேவை தான். ஆனால், அதுவே அடுத்த போட்டிகளில் சரியாக ரன் குவிக்க முடியாமல் போன போது, அரைசதம் கூட அடிக்க முடியாமல் போன போது, ராகுல் நம்பிக்கை இழக்க காரணமாக இருந்தது.

முதலில் சூப்பர் பார்ம்

முதலில் சூப்பர் பார்ம்

தன் முதல் 20 டெஸ்ட் போட்டிகளில் 1421 ரன்கள் குவித்த ராகுல், சராசரியாக 45க்கும் மேல் வைத்து இருந்தார். நான்கு சதம், பத்து அரைசதம் அடித்து இருந்தார். ஒரு இன்னிங்க்ஸ்-க்கு சராசரியாக 77 பந்துகளை சந்தித்து இருந்தார்.

பெரிய சறுக்கல்

பெரிய சறுக்கல்

ஆனால், அடுத்த 16 போட்டிகளில் அவர் சராசரி 22க்கும் கீழே. மேலும், இதே காலத்தில் ஒரு இன்னிங்க்ஸ்-க்கு சராசரியாக 39 பந்துகள் மட்டுமே சந்தித்து இருக்கிறார். இந்த காலகட்டத்தில் 28 இன்னிங்க்ஸ்களில் 19 முறை 20க்கும் குறைவான ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து இருக்கிறார்.

மிகக் குறைந்த சராசரி

மிகக் குறைந்த சராசரி

கடந்த நவம்பர் 2017 முதல் டெஸ்ட் துவக்க வீரர்களில் மிகக் குறைந்த சராசரி வைத்துள்ள வீரர் ராகுல் தான். 14 போட்டிகளில் 21.65 சராசரி வைத்துள்ளார் ராகுல். ஆஸ்திரேலியாவின் பான்கிராப்ட் 22 ரன்கள் சராசரியுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இது தான் கொடுமை

இது தான் கொடுமை

இதில் கொடுமை என்னவென்றால், ராகுலை இடையில் நீக்கினாலும், தவான், முரளி விஜய் நீக்கம், ப்ரித்வி ஷா காயம், தடை என ஆட முடியாத நிலை ஏற்பட்ட போது, பார்ம் அவுட்டில் இருக்கிறார் என தெரிந்தும் ராகுலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

கேப்டனின் நட்பு வட்டத்தில் இருப்பதால் தான் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என ரசிகர்கள் கூறினாலும், தொடர்ந்து வாய்ப்பு பெற்று சொதப்பிக் கொண்டே வந்தார் ராகுல். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு கிடைத்த இறுதி வாய்ப்பில் 4 இன்னிங்க்ஸ்களில் 101 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இனியும் வைத்திருக்க முடியாது

இனியும் வைத்திருக்க முடியாது

இதற்கு மேலும், ராகுலை அணியில் வைத்திருக்க முடியாது. காரணம், இனி ஆடும் டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இடம் பெறும். ராகுலால் அணிக்கு பின்னடைவு என தெரிந்தும் அவரை அணியில் வைத்திருக்க முடியாது என்ற நிலையில் தான், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது தேர்வுக் குழு.

ரோஹித் வாய்ப்பு பெற்றார்

ரோஹித் வாய்ப்பு பெற்றார்

நீண்ட காலமாக டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு வரும் ரோஹித் சர்மா, ராகுலுக்கு பதிலாக துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் மிடில் ஆர்டரில் மட்டுமே இடம் பெறுவார் என்ற நிலையை மாற்றி அவருக்கு துவக்க வீரராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Story first published: Friday, September 13, 2019, 12:05 [IST]
Other articles published on Sep 13, 2019
English summary
IND vs SA : Reason behind KL Rahul dropped from team India test squad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X