Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன? ஜெய்ஸ்வால் விட்ட கேட்சால் மாறிய ஆட்டம்

ராய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணி 358 ரன்கள் குவித்தும், தோல்வியை தழுவி இருக்கிறது. இதற்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியை விட ராய்ப்பூரில் அதிக அளவு பனிப்பொழிவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பேட்டிங் செய்ய சுலபமாக கள சூழல் மாறிவிட்டதாகவும், இதனால் தான் இந்திய அணி வீரர்கள் பந்துவீச்சில் தடுமாறியதாகவும் கேப்டன் ராகுல் கூறியிருந்தார். ராகுல் சொன்னதில் சில உண்மைகள் இருந்தாலும், 359 ரன்கள் என்ற இலக்கை துரத்த அனுமதிப்பதெல்லாம் மிகப்பெரிய குற்றம்.

Ind vs sa-

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் பில்டிங்கில் பல ரன்களை விட்டதுதான். குறிப்பாக தென்னாபிரிக்க அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரராக களமிறங்கிய ஏய்டன் மார்க்கரம் அடித்த சதம் தான். இதன் மூலம் அந்த அணி நல்ல ஒரு அடித்தளத்தை பெற்றது.

ஏய்டன் மார்க்கரம் 59 ரன்கள் எடுத்திருந்தபோது குல்தீப் வீசிய பந்தை தூக்கி அடித்தார்.அந்த பந்தை சிக்ஸர் லைனில் நின்று கொண்டிருந்த ஜெய்ஸ்வால் பிடிக்க முற்பட்டபோது, அதை கோட்டை விட்டார். அந்த பந்து சிக்ஸருக்கு சென்றது. இதன் மூலம் மார்க்கரம்க்கு எக்ஸ்ட்ரா ஒரு வாய்ப்பு கிடைக்க அதை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

ஒருவேளை ஜெயஸ்வால் அந்த கேட்சை பிடித்திருந்தால் அது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கும். இதேபோன்று இந்திய வீரர்கள் நேற்றைய ஆட்டத்தில் ரன் அவுட் செய்கிறேன் என்று பந்தை எரிந்து அது ஸ்டெம்பை அடிக்காமல் போனது. இதை பயன்படுத்திக் கொண்டு பல கூடுதல் ரன்களை தென்னாப்பிரிக்கா வீரர்கள் ஓடினார்கள்.

இதுவும் பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ் கைக்கு வந்த பந்தை தடுக்க முற்பட்டு அது பௌண்டரிக்கு சென்றது. இப்படி பில்டிங்கில் மட்டுமே இந்திய அணி ஒரு 30 ரன்கள் வரை கோட்டை விட்டிருக்கும். பில்டிங்கில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் ஒருவேளை தென்னாபிரிக்கா அணியை 300 ரன்களில் சுருட்டி இருக்கலாம். இதேபோன்று பந்துவீச்சில் இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வழங்கினார்.

இது போன்ற கள சூழலில் பந்து வீச அனுபவம் நிச்சயம் தேவை. ஆனால் இந்திய அணியில் இந்த மூன்று வீரர்களை தவிர கூடுதலாக எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் தேர்வு செய்யப்படவில்லை. இது தேர்வு குழு மற்றும் பயிற்சியாளரின் தவறாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் முகமது சமி இருந்திருந்தால் அவர் ஆரம்ப கட்டத்திலேயே சில விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருப்பார். இது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறி இருக்கிறது.

Story first published: Thursday, December 4, 2025, 7:08 [IST]
Other articles published on Dec 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+