Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. ரிஷப் பண்ட் கேப்டனாக நியமனம்

மும்பை: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென்னாப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி நவம்பர் மாதம் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இம்மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடருக்கு தயாராகும் விதமாக தென்னாப்பிரிக்கா ஏ அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாடுகிறது. இதில் முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டி அக்டோபர் 30-ம் தேதி தொடங்கி, நவம்பர் இரண்டாம் தேதி வரையும், இரண்டாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டி நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி நவம்பர் 9ஆம் தேதி வரையும் நடைபெறுகிறது.

Rishabh Pant

தற்போது தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாத ரிஷப் பண்ட், தற்போது மீண்டும் திரும்பி இருக்கிறார். இந்த அணியின் கேப்டனாக அவர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதன் மூலம் அவர் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார். இந்த இந்திய ஏ அணியில் சாய் சுதர்சன் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

குறிப்பாக நவம்பர் 6ஆம் தேதி தொடங்க உள்ள இரண்டாவது நான்கு டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுல், துருவ் ஜூரல் பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் விளையாட உள்ளனர்.வெறும் முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் ரஜத் பட்டிதார், ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன் ஆகாஷ் தீப், நாராயன் ஜெகதீசன் விளையாட உள்ளனர்.

முதல் நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணி:
ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), தேவதத் படிக்கல், ரஜத் பட்டிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியன், மனவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரண்ஷ் ஜெயின், குர்னூர் பிரார், கலீல் அகமது.

இரண்டாவது நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணி:
ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், த்ருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), தேவதத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியன், மனவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

Story first published: Tuesday, October 21, 2025, 16:14 [IST]
Other articles published on Oct 21, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+