Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட்.. இந்திய அணி அறிவிப்பு..ரிஷப் பண்ட்-க்காக தமிழக வீரர் நீக்கம்

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடர் வரும் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பன்ட் தற்போது அணிக்கு திரும்பிருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

India squad for SA

ஆனால் ஜெகதீசன் பதிலாக ரிஷப் பந்தும், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஆகாஷ் தீப்பும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அண்மையில் தென்னாபிரிக்கா ஏ அணிக்கு எதிராக பண்ட் களம் இறங்கி இரண்டாவது இன்னிங்ஸில் 90 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இதன் மூலம் தனது உடல் தகுதியை அவர் நிரூபித்த நிலையில் ரிஷப் பன்ட் முக்கியவீராக சேர்க்கப்பட்டிருக்கிறார். கேப்டனாக கில் தொடர்கிறார். வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா,, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.

ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் அணியில் தொடர்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தொடக்க வீரராக ஜெய்ஸ்வால், ராகுலுடன் களமிறங்குவார். நடுவரிசையில் தேவுதட் படிக்கல் துருவ் ஜூரல் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில், ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவுதட் படிக்கல், த்ருவ் ஜூரல், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஸர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Story first published: Wednesday, November 5, 2025, 18:51 [IST]
Other articles published on Nov 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+