Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் விலகல்.. ராகுல் ஒருநாள் அணியின் கேப்டன்.. சூர்யகுமார் டி20 அணியின் கேப்டன்.. பிசிசிஐ அதிரடி

மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கே எல் ராகுலையும், இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவையும் பிசிசிஐ நியமித்துள்ளது. ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறார்.

இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

2023 உலகக்கோப்பை தொடருக்கு பின் மூத்த வீரர்கள் இந்திய அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்ய முடிவு செய்தது பிசிசிஐ. ஆனால், விராட் கோலி தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் இடம் பெற விரும்பவில்லை எனக் கூறி இருந்த நிலையில், ரோஹித் சர்மா வும் அதே முடிவை எடுத்துள்ளார்.

மூத்த வீரர்கள் விலகல் மற்றும் இனி டி20 உலகக்கோப்பை முடியும் வரை ஒருநாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறையும் என்ற நிலையில், ஒருநாள் அணியில் பல வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது

IND vs SA : Rohit Sharma appointed as T20 captain, KL Rahul become ODI Captain

இதுவரை ஒருநாள் அணியில் வாய்ப்பு பெறாத சஞ்சு சாம்சன், காயத்தில் இருந்த ரஜத் படிதார் ஆகியோர் ஒருநாள் அணிக்கு திரும்ப உள்ளனர். ஒருநாள் அணிக்கு கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட உள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் அணியில் இருந்து தற்காலிகமாக விலகி உள்ளனர். அவர்கள் இருவரும் டெஸ்ட் தொடரில் மட்டும் பங்கேற்க உள்ளனர்.

டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவையே நியமிக்க விரும்பியது பிசிசிஐ. ஆனால், அவர் காயத்தில் இருப்பதால் அணிக்கு நிரந்தர கேப்டன் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ரோஹித் சர்மா டி20 அணிக்கு திரும்ப மறுத்துள்ளார். தற்போது ஆஸ்திரேலிய டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கும் நிலையில், அவரே தென்னாப்பிரிக்கா டி20 தொடரிலும் கேப்டனாக தொடர இருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி : ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். , முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார், தீபக் சாஹர்.

Story first published: Thursday, November 30, 2023, 19:50 [IST]
Other articles published on Nov 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+