Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA - இந்தியாவின் விதியை மாற்றியதா அக்சர் பட்டேல் ரன் அவுட்? கடுப்பாகி முகத்தை காட்டிய ரோகித்

பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தடுமாறிய போது அக்சர் பட்டேல் அபாரமாக விளையாடி இந்திய அணியை காப்பாற்றினார். எனினும் அக்சர் பட்டேல் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று ரன்களில் அரை சதத்தை தவற விட்டார்.

பார்படாஸ் பகுதியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது. முதலில் விளையாடுவதால் மிகப்பெரிய இலக்கை இந்தியா நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா ஒன்பது ரன்களில் ஆட்டமிழக்க அதிர்ச்சி தொடக்கமாக இந்தியாவுக்கு அமைந்தது.

t20 world cup ind vs sa axar patel

ரிஷப் பன்ட் டக் அவுட் ஆகியும் சூரிய குமார் யாதவ் மூன்று ரன்களிலும் வெளியேற இந்திய அணி 34 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து இந்தியா 120 ரன்களில் ஆட்டமிழக்க போகிறது என ரசிகர்கள் கலக்கத்தில் இருந்தனர். அப்போது அக்சர் பட்டேல் களத்திற்கு ப்ரமோஷன் ஆகி வந்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அக்சர் பட்டேல் 31 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் அடங்கும். அக்சர் பட்டேல் கடைசி வரை களத்தில் நின்று 60 ,70 ரன் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் எதிர் முனையில் நின்ற போது விராட் கோலி அடித்த பந்தை பார்த்து ரன் ஓட முயன்றார்.

ஆனால் விராட் கோலி திடீரென்று ரன் வேண்டாம் எனக் கூறினார். அப்போது திரும்பி மீண்டும் கிரீசுக்கு செல்வதற்குள் டி காக் டைரக்டாக பந்தை எரிந்து ரன் அவுட் செய்தார். இதனால் அக்சர் பட்டேல் மூன்று ரன்களில் அரைசதத்தை தவறவிட்டார். ஒரு சாதாரண பந்துவீச்சாளரான அக்சர் பட்டேல் இறுதிப்போட்டியில் 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்ததை ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் எழுந்து நின்று கொண்டாடினர்.

ஆனால் ரோகித் சர்மா மட்டும் கடுப்பாகி தேவையில்லாமல் ரன் அவுட் ஆகிவிட்டார் என்று சைகையில் தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தினார். விராட் கோலி திடீரென்று ரன் வேண்டாம் என மறுத்தாலும் அக்சர் பட்டேல் அலட்சியமாக இருந்தது இந்த ஆட்டமிழப்புக்கு காரணம் ஐசிசி தொடரில் நாக் அவுட் சுற்றில் எப்போதெல்லாம் இந்திய அணியை காப்பாற்றும் வீரர்கள் முக்கிய கட்டத்தில் ரன் அவுட் ஆவது தொடர்கதையாகி வருகிறது.

Story first published: Saturday, June 29, 2024, 21:31 [IST]
Other articles published on Jun 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+