Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: 2வது ஒருநாள் போட்டியில் ருதுராஜ் நீக்கப்பட வாய்ப்பு? MI வீரர் அணியில் சேர்க்கப்படுவாரா?

மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. எனினும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அணியில் இடம் பிடித்த சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் 14 பந்துகளுக்கு எதிர்கொண்டு 8 ரன்கள் எடுத்திருந்தபோது, பிரவீஸ் அபார கேட்சால் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட், இரண்டாவது ஒருநாள் போட்டியில் நீக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஏற்கனவே தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ருதுராஜ் கெய்க்வாட்க்கு நீண்ட நாள் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், அவர் நீக்கப்பட்டால் அதை விட ஒரு முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Ruturaj

இந்த தருணத்தில் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டால் அவருக்கு பதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. கம்பீருக்குஇடது கை , வலதுகை பேட்ஸ்மேன் காம்பினேசன் பிடிக்கும் என்பதால், திலக் வர்மாவுக்கு அணியில் முன்னுரிமை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதே போன்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட்க்கும் அணியில் இடம் இல்லை. இதனால் அவருக்கும் நாளைய போட்டியில் இடம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதேபோன்று அணியில் இருக்கும் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் அடிக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று அஸ்வின் வலியுறுத்தி இருந்தார். நிதிஷ்குமார் ரெட்டியை கம்பீருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவருக்கும் அணியில் இடம் தர கம்பீர் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

இதற்கு பதில் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டியை சேர்க்க கம்பீர் முடிவெடுக்கலாம். ஒருவேளை ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டால் அந்த இடத்தில் திலக் வர்மா அல்லது பண்ட்டும், வாஷிங்டன் சுந்தருக்கு பதில் நிதீஷ் குமார் ரெட்டி அணியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது இதைத் தவிர வேறு எந்த ஒரு மாற்றத்தையும் கம்பீர் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, December 2, 2025, 10:06 [IST]
Other articles published on Dec 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+