Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: தங்கம் போன்ற வாய்ப்பை மீண்டும் இழந்தார் சாய் சுதர்சன்..புஜாராவுக்கு மாற்று வீரரே இல்லையா?

மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை காப்பாற்றும் வாய்ப்பு தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு கிடைத்தும், அவர் அதனை வீணடித்திருப்பது ரசிகர்களை விரக்தி அடைய செய்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது வீரர் என்ற இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பல சரித்திர நாயகர்கள் இந்த இடத்தில் களமிறங்கி தான் சாதித்து இருக்கிறார்கள். பிராட்மன், ரிக்கி பாண்டிங், ராகுல் டிராவிட், புஜாரா போன்ற வீரர்கள் எல்லாம் நம்பர் மூன்றாம் இடத்தில் விளையாடினார். தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆட்டத்தை நிலை நிறுத்தி ஒரு கப்பலின் மாலுமி போல் நம்பர் மூன்றாவது வீரர் செயல்பட வேண்டும்.

sai Sudharsan

இந்த நிலையில் புஜாராவுக்கு பின் இந்திய அணியில் மூன்றாவது வீரர்களுக்கான இடம் காலியாகவே இருக்கிறது. அந்த இடத்தில் கில் ஒரு அளவுக்கு தேடி வந்த நிலையில், தற்போது அவர் நான்காவது வீரராக களம் இறங்கி வருகிறார். இதை அடுத்து மீண்டும் மூன்றாவது வீரருக்கான தேடல் தொடங்கியது.

இதில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சாய் சுதர்சன் எதிர்பார்த்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கூட அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் 489 ரன்கள் 65 ரன்கள் விக்கெட்டை இந்திய அணி இழந்த நிலையில் சாய் சுதர்சன் மூன்றாவது வீரராக களத்திற்கு வந்தார்.

அப்போது அவர் பேட்டிங்கில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 15 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனார். இது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாய் சுதர்சனுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இடம் தரப்படாமல் இருந்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது கிடைத்த வாய்ப்பை அவர் வீணடித்திருப்பதன் மூலம் கம்பீர் செய்தது சரிதான் என்பது போல் காட்டி விட்டதாக ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் மட்டும் சாய் சுதர்சன் சதமோ இல்லை இரட்டை சதமோ அடித்து இருந்தால் காலத்திற்கு அவருடைய பெயர் நிலைத்து இருந்திருக்கும் என்றும் இது போன்ற வாய்ப்புகள் மீண்டும் வராது என்றும் ரசிகர்கள் சாடியுள்ளனர்.

Story first published: Monday, November 24, 2025, 11:42 [IST]
Other articles published on Nov 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+