Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரித்திரம் படைத்த சஞ்சு சாம்சன்.. எந்த இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத இமாலய சாதனையை படைத்தார்

டர்பன்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் எந்த இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத இரண்டு முக்கிய சாதனைகளை படைத்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் சிக்ஸர் சாதனை ஒன்றையும், சதம் சாதனை ஒன்றையும் படைத்தார்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் துவக்க வீரராக இறங்கிய சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்தார். அதன் பின் 47 பந்துகளில் சதம் அடித்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அடிக்கும் இரண்டாவது சதம் ஆகும்.

ind vs sa india south africa 20

முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சதம் அடித்து இருந்தார். அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆடிய சஞ்சு சாம்சன் இதிலும் சதம் அடித்து இருக்கிறார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் நான்காவதாக இணைந்தார் சஞ்சு சாம்சன்.

இதற்கு முன் கஸ்டாவ் மெக்கியான், ரைலி ரூசோ, ஃபில் சால்ட் ஆகியோர் இந்த சாதனையை செய்து இருந்தனர். இந்த சாதனைப் பட்டியலில் சஞ்சு சாம்சன் நான்காவதாக இணைந்தார். 50 பந்துகளில் 107 ரன்கள் குவித்த நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அவர் 10 சிக்ஸ் அடித்து இருந்தார்.

அதன் மூலம் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் இடையேயான டி20 போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ரைலி ரூசோ 8 சிக்ஸ் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்தார்.

மேலும், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகளில் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார் சஞ்சு சாம்சன். இதற்கு முன் டேவிட் மில்லர் 2022இல் கவுஹாத்தி டி20 போட்டியில் 106 ரன்கள் எடுத்து இருந்ததே அதிக ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்தார்.

Story first published: Friday, November 8, 2024, 22:10 [IST]
Other articles published on Nov 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+