For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA - சஞ்சு சாம்சனை நம்ப முடியாது! எச்சரிக்கை கொடுத்த அனில் கும்ப்ளே

டர்பன் : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ஆர்ஸ்தீப் சிங், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

இந்திய அணி அண்மையில் சூரிய குமார் தலைமையில் இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை வென்றது. எனினும் தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்த டி20 தொடர் நடைபெறுகிறது.

ind vs sa sanju samson suryakumar yadav hardik pandya

இது கடும் சவால்களை இந்திய வீரர்களுக்கு கொடுக்கும். எனினும் டர்பன் ஆடுகளத்தில் பந்தின் பவுன்ஸ் நன்றாக இருக்கும். பந்து பேட்டிற்கு வேகமாக வரும். இதனால் இந்திய வீரர்கள் ரன் குவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழலில் முன்னாள் இந்திய அணி கேப்டன் அனில் கும்ப்ளே , சஞ்சு சாம்சன் குறித்து தனது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சஞ்சு சாம்சனை இந்திய டி20 அணியின் நீண்ட காலத் திட்டத்திற்கு ஒரு முக்கிய வீரராக பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து பல விவாதங்கள் எழுகின்றன. வங்கதேசத்துக்கு எதிராக அவர் அடித்த சதம் நிச்சயம் சாம்சனுக்கு நம்பிக்கையை அதிகரித்திருக்கும். சஞ்சு சாம்சனின் திறமை மீது கொஞ்சம் கூட சந்தேகம் கிடையாது.

அவர் திறமை வாய்ந்த வீரர். எனினும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து ஒரே மாதிரி ரன் அடிக்க மாட்டார். அது மட்டும் தான் ஒரு சிக்கலாக இருக்கின்றது. தேர்வு குழுவினரும் இதனை கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புகின்றேன். தொடக்க வீரராகவோ அல்லது இரண்டு அல்லது மூன்றாவது வீரராகவோ சஞ்சு சாம்சனை களம் இறக்கினால் மட்டுமே அவர் அணிக்கு பயன்படுவார்.

சஞ்சு சாம்சன் பேக் புட் (Back foot) வைத்து ஆடுவதால் வேகபந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராகவும் அதிரடியாக ரன்களை குவிக்க முடியும். தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் சஞ்சு சாம்சன் 4 போட்டிகளில் எப்படி விளையாடப் போகிறார் என்பதை பார்க்க நான் ஆர்வமாக இருக்கின்றேன் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் இதுவரை 33 டி20 போட்டிகளில் விளையாடி 594 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் ஒரு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். சராசரி 22 என்று அளவில் குறைவாக இருக்கின்றது. இதனை அதிகரிக்க சந்து சாம்சன் முற்படுவார். சஞ்சு சம்சன் இதுவரை தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 6, 2024, 20:21 [IST]
Other articles published on Nov 6, 2024
English summary
IND vs SA- Sanju samson consistency is bit concern Warns Anil Kumble சஞ்சு சாம்சனை நம்ப முடியாது! எச்சரிக்கை கொடுத்த அணில் கும்ப்ளே
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+