மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி வெளியேறி இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் 107 ரன்கள் விளாசி இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களம் இறங்கிய சஞ்சு சாம்சன் ஆடுகளம் வேக பந்துவீச்சு சாதகமாக இருந்தாலும் அதிரடியாக ஆட முயற்சி செய்து தேவையில்லாத ஒரு ஷாட் ஆட முயன்று போல்ட் ஆனார்.

இதன் மூலம் இந்திய அணி முதல் ஓவரிலே விக்கெட்டுகளை இழந்தது. சஞ்சீவ் சாம்சன் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வங்கதேசத்துக்கு எதிராக சதம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் என அடித்திருந்தார்.இந்த சூழலில் இன்று ஹாட்ரிக் சதம் அடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சாம்சங் டக் அவுட்டாகி இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி 202 ரன்கள் எடுக்க அதில் பாதிக்கு மேல் சஞ்சு சாம்சன் தான் அடித்திருந்தார். இந்த நிலையில் இரண்டாவது t20 போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. முதல் டி20 போல் 200 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை என்றாலும் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்கள் அடிக்க வேண்டும்.
அப்போதுதான் வெற்றி பெற முடியும். அதுமட்டுமில்லாமல் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி மூன்று சுழற் பந்து வீச்சாளர் வைத்து களமிறங்கியதும் தவறான முடிவாக பார்க்கப்படுகிறது. எனினும் தற்போது வெயில் அடிக்க தொடங்கி இருப்பதால், ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதம் காய வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறலாம். இதனால் இந்திய அணி வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.