Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேட்டன் சம்பவம்.. டி20 வரலாற்றில் முதல் இந்திய வீரர்.. 47 பந்துகளில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!

டர்பன்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 9 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக அடுத்தடுத்த டி20 போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் 2 போட்டிகளில் மோசமாக விளையாடிய அவர், கடைசி போட்டியில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். 47 பந்துகளில் 111 ரன்களை விளாசிய அவர், ஏராளமான சாதனைகளை படைத்தார்.

ind vs sa sanju samson suryakumar yadav

இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் சஞ்சு சாம்சனுக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு மீண்டும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

2வது ஓவரிலேயே பவுண்டரியை விளாசிய சஞ்சு சாம்சன், 3வது ஓவரில் 4, 6 என்று அடுத்தடுத்து பொளந்து கட்டினார். பின்னர் மார்கோ யான்சன் பவுலிங்கில் மீண்டும் 4, 6 என்று விளாசித் தள்ள, இந்திய அணியின் ஸ்கோர் பவர் பிளே ஓவர்கள் முடிவில் 56 ரன்களாக உயர்ந்தது. தொடர்ந்து இளம் பவுலர் பீட்டர் பவுலிங்கில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசிய அவர், 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் மூலம் தோனிக்கு பின் தென்னாப்பிரிக்காவில் அரைசதம் விளாசிய 2வது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.

இதன்பின் சஞ்சு சாம்சனின் அதிரடி அடுத்த கியருக்கு சென்றது. ஒவ்வொரு ஓவருக்கும் 2 பவுண்டரிகளை கட்டாயம் விளாச வேண்டும் என்று முன் முடிவுகள் விளாசி அசரடித்தார். அதிலும் சிமிலேன் பவுலிங்கில் 4, 4, 6 என்று விளாச, சஞ்சு சாம்சன் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 92 ரன்களில் இருந்த போது, க்ரூகர் பவுலிங்கில் அபார ஒரு சிக்ஸ் அடிக்க, மைதானத்தில் ஆச்சரியத்தில் உறைந்தது.

பின்னர் மஜாராஷ் பவுலிங்கில் ஒரு ரன்னை தட்டிவிட்டு சஞ்சு சாம்சன் தனது 2வது டி20 சதத்தை நிறைவு செய்தார். 47 பந்துகளில் 9 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட சதம் விளாசி சஞ்சு சாம்சன் சாதனை படைத்துள்ளார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த டி20 போட்டிகளில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.

Story first published: Friday, November 8, 2024, 21:57 [IST]
Other articles published on Nov 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+