Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ஒரே மேட்ச்சில் சுப்மன் கில் டி20 கேரியருக்கு ஆப்பு வைத்த சஞ்சு சாம்சன்.. என்ன செய்தார்?

அகமதாபாத்: தென்னாப்பிரிக்க டி20 தொடரின் ஐந்தாவது போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன், கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பில் சுப்மன் கில் இந்தத் தொடர் முழுவதும் சேர்த்த ரன்களை விட அதிகமாக அடித்து, தேர்வாளர்களுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

2026 டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில், இந்திய அணியின் துவக்க வீரருக்கான இடம் யாருக்கு? என்ற போட்டி சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், சஞ்சு சாம்சனின் ஆட்டம் சுப்மன் கில்லின் டி20 இடத்திற்கு மிகப்பெரிய அழுத்தம் ஏற்படுத்தி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

IND vs SA Sanju Samson Outshines Shubman Gill in 5th T20I A Threat to Gill s 2026 World Cup Spot

கில்லின் மோசமான ஃபார்ம்

இந்தத் தொடரில் சுப்மன் கில்லின் ஆட்டம் மிக மோசமாகவே இருந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் கில் களமிறங்கினார். ஆனால் அவரால் சோபிக்க முடியவில்லை. அந்த மூன்று போட்டிகளையும் சேர்த்து அவர் மொத்தமாகவே வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

மூன்று இன்னிங்ஸ்களில் 31 பந்துகளை எதிர்கொண்ட அவர், 103.22 என்ற மிகக் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ரன் சேர்த்தார். அவரது சராசரி வெறும் 10.66 மட்டுமே. பவர் ப்ளே ஓவர்களில் அதிரடி காட்ட வேண்டிய துவக்க வீரர் இப்படி ஆமை வேகத்தில் ஆடுவது அணிக்கு பின்னடைவாகவே அமைந்தது.

ஒரே போட்டியில் முந்திய சஞ்சு

நான்காவது போட்டி பனிமூட்டத்தால் ரத்தான நிலையில், இன்று நடந்த 5வது போட்டியில் கில்லுக்கு லேசான காயம் ஏற்பட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கிய சஞ்சு, ஆரம்பம் முதலே தனது அதிரடி ஆட்டம் ஆடும் நோக்கத்தை தெளிவாகக் காட்டினார்.

சுப்மன் கில் மூன்று போட்டிகளில் போராடி சேர்த்த 32 ரன்களை, சஞ்சு சாம்சன் இந்த ஒரே இன்னிங்ஸில் சர்வசாதாரணமாகக் கடந்தார். வெறும் 22 பந்துகளை மட்டுமே சந்தித்த சஞ்சு சாம்சன் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் விளாசினார்.

சுப்மன் கில் 103 ஸ்ட்ரைக் ரேட்டில் திக்கித் திணறிய நிலையில், சஞ்சு சாம்சன் 168.18 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டினார். டி20 கிரிக்கெட்டில் துவக்க பேட்ஸ்மேனிடம் அணி எதிர்பார்ப்பது இந்த வேகத்தைத்தான். சுப்மன் கில் 3 இன்னிங்ஸ்களில் செய்ய முடியாததை, சஞ்சு ஒரே இன்னிங்ஸில் செய்து காட்டியுள்ளார்.

ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லின் அணுகுமுறை சரியில்லை என்றும், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி வீரர்களை துவக்கம் அளிக்க வைக்க வேண்டும் என்றும் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக 2026 டி20 உலகக்கோப்பைக்கு கில்லை விட சஞ்சுவே சிறந்த தேர்வு என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் வெளிப்படுத்திய ஆட்டம் அந்த வாதத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. ஒரே ஒரு வாய்ப்பு, அதுவும் கில் இல்லாத நேரத்தில் கிடைத்த வாய்ப்பை வைத்து, "நான் இருக்கேன்" என சஞ்சு சாம்சன் ஆணித்தரமாக நிரூபித்துள்ளார். இனி தேர்வாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்வி. வரும் சனிக்கிழமை அன்று 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணித் தேர்வு நடைபெற உள்ளது. அதில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா?

Story first published: Saturday, December 20, 2025, 6:20 [IST]
Other articles published on Dec 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+