Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ஒரே ஷாட்டில் சஞ்சு சாம்சன் 2 சாதனை.. அணியில் எனக்கா இடமில்லை.. பேட்டிங்கில் மாஸ் சம்பவம்

அகமதாபாத்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது டி20 சர்வதேசப் போட்டியில், சஞ்சு சாம்சன் ஒரே ஒரு ஷாட்டின் மூலம் இரண்டு முக்கிய சாதனைகளை நிகழ்த்தினார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இன்னிங்ஸைத் தொடங்கிய சஞ்சு சாம்சன், போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே ஒரு அபாரமான சிக்ஸரை அடித்தார். அவரது கம்பீரமான ஷாட் லாங்-ஆன் திசையைக் கடந்து சென்றது.

அந்த ஒரு ஷாட்டின் மூலம் சஞ்சு இரண்டு மைல்கற்களைப் பதிவு செய்தார். இதன்மூலம் இந்திய அணிக்காக அவர் 1000 டி20 சர்வதேச ரன்களை கடந்தார். இதே போன்று டி20 கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்தது. சுப்மன் கில் காயம் அடைந்த நிலையில், சஞ்ச சாம்சனுக்கு மீண்டும் இந்திய அணியில் அதுவும் தொடக்க வீரராக வாய்ப்பு கிடைத்தது.

சஞ்சு சாம்சன் அடித்த அந்த அற்புதமான ஷாட்டைப் பற்றி பேசிய வர்ணனையாளர் ரவி சாஸ்திரி, சஞ்சு சாம்சன் மிகச் சிறந்த வீரர். அவர் நீண்ட காலமாக அணியிலிருந்து விலகியிருந்தார், ஆனால் அவரது ஷாட்டின் எளிமை ஆச்சரியமளிக்கிறது. நீண்ட காலம் வெளியே இருந்துவிட்டு, இப்படி துல்லியமாக பந்தை அடித்து விளையாடுவது எளிதல்ல," என்று குறிப்பிட்டார்.

இந்திய அணிக்காக 1000 டி20 சர்வதேச ரன்களைக் கடந்த 14வது இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்ற பல ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் சஞ்சுவும் தற்போது இணைந்துள்ளார்.

இந்திய அணிக்காக அதிக டி20 சர்வதேச ரன்கள் எடுத்தவர்கள்: ரோஹித் ஷர்மா (4231), விராட் கோலி (4188), சூர்யகுமார் யாதவ் (2783), கே.எல். ராகுல் (2265), ஹர்திக் பாண்டியா (1939), ஷிகர் தவான் (1759), எம்.எஸ். தோனி (1617), சுரேஷ் ரெய்னா (1605), ரிஷப் பந்த் (1209), யுவராஜ் சிங் (1177), திலக் வர்மா (1110), ஸ்ரேயாஸ் ஐயர் (1104), அபிஷேக் ஷர்மா (1081), சஞ்சு சாம்சன் (1016).

மேலும், டி20 போட்டிகளில் 8000 ரன்களைக் கடந்த ஏழாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், சுரேஷ் ரெய்னா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் இப் பட்டியலில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க வீரர்கள் ஆவர்.

Story first published: Friday, December 19, 2025, 20:11 [IST]
Other articles published on Dec 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+