Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் வீரர்.. ஒரே ஆண்டில் 3 டி20 சதங்கள்.. புதிய வரலாறு படைத்த சஞ்சு சாம்சன்!

ஜொகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தனது 3வது சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார். 51 பந்துகளில் 8 சிக்ஸ், 6 பவுண்டரிகள் உட்பட சதம் விளாசிய அவர், கடைசி 5 போட்டிகளில் மட்டும் 3 சதங்களை விளாசி புதிய வரலாறு படைத்திருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவடைந்தப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சனை செல்ஃபோனில் அழைத்து அடுத்த 7 போட்டிகளுக்கு இந்திய அணியின் தொடக்க வீரர் நீங்கள் தான் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சனின் ஆட்டம் வேறு லெவலுக்கு சென்றது. வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 2 சதங்களை விளாசினார்.

ind vs sa sanju samson tilak varma

இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 2 சதங்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். ஆனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டிகளில் டக் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் சஞ்சு சாம்சன் மீது மீண்டும் கன்சிஸ்டன்சி இல்லை என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இதனால் கடைசி போட்டியில் சஞ்சு சாம்சன் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய தேவையுடன் களமிறங்கினார். முதல் ஓவரில் மட்டும் நிதானம் காத்த சஞ்சு சாம்சன், 2வது ஓவரிலேயே சிக்ஸ், பவுண்டரி என்று பொளந்து கட்டினார். ஒவ்வொரு ஓவருக்கும் சிக்ஸ், பவுண்டரி பறந்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் பவுலர்கள் என்ன செய்வதென புரியாமல் புலம்ப தொடங்கினர்.

ஸ்டப்ஸ் வீசிய 10வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இது அவரின் 4வது அரைசதமாகும். இதன்பின் சஞ்சு சாம்சனின் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஒவ்வொரு ஓவரிலும் சிக்சர்களை பறக்கவிட்டுக் கொண்டே இருந்தார். இதனால் சஞ்சு சாம்சனின் ஸ்கோர் 90 ரன்களை கடந்தது. இதையடுத்து சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அப்போது கோட்ஸி வீசிய ஓவரில் பவுண்டரி அடித்து 99 ரன்களுக்கு செல்ல, அடுத்த பந்திலேயே ஒரு ரன்னை எடுத்து தனது 3வது சதத்தை சஞ்சு சாம்சன் எட்டினார். 51 பந்துகளில் 8 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 100 ரன்களை எட்டி சஞ்சு சாம்சன் சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் சஞ்சு சாம்சன் அடிக்கும் 3வது சதம் இதுவாகும்.

அதேபோல் டி20 கிரிக்கெட்டில் 3 சதங்களை விளாசிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். அதுமட்டுமல்லாமல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற புதிய வரலாற்றையும் சஞ்சு சாம்சன் படைத்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Story first published: Friday, November 15, 2024, 22:18 [IST]
Other articles published on Nov 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+