அகமதாபாத்: தெஙனனாப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் தமக்குகிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் அபாரமாகப் பயன்படுத்திக்கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 22 பந்துகளை எதிர்கொண்ட அவர் 37 ரன்கள் சேர்த்தார். இந்தச் சூழலில், நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்பாராத ஒரு நிகழ்வு அரங்கேறியது. சஞ்சு சாம்சன் அடித்த ஒரு ஷாட் எதிர்பாராத விதமாக நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றிருந்த கள நடுவரை தாக்கியது.
ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில், டோனோவன் ஃபெரீரா வீசிய பந்தை சஞ்சு பலமாக அடித்து திருப்பி அனுப்பினார். பந்து ஃபெரீராவின் கைகளில் பட்டு எதிர்பாராத விதமாக திசைமாறியது. அது நேராக கள நடுவர் ரோஹன் பண்டிட்டின் முழங்காலில் பலமாக தாக்கியது.

பந்து தாக்கிய வேகத்தில் நடுவர் உடனே வலியால் சுருண்டு விழுந்தார். இந்த எதிர்பாராத காயத்தால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.நடுவர் ரோஹன் பண்டிட்டிற்கு சிகிச்சையளிப்பதற்காக தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணியின் உடற்பயிற்சியாளர்கள் விரைந்தனர். முதலுதவி சிகிச்சை மற்றும் வலி நிவாரண மருத்துவகளை வழங்கிய பிறகு, ரோஹன் பண்டிட் தனது நடுவர் பணியைத் தொடர்ந்தார்.
இதனால் தடைபட்டிருந்த போட்டி மீண்டும் தொடங்கியது. ஷுப்மன் கில்லுக்குப் பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த சாம்சன் தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு விளையாடினார்.
கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டதிழந்தார். 9 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்திருந்தார். சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் இணைந்து இந்திய அணிக்கு ஒரு அருமையான தொடக்கத்தை அளித்தனர்.