Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருப்பா இவரு? தென்னாப்பிரிக்க அணியில் ஆடும் தமிழர்.. கிடைத்த ஒரே ஓவரில் விக்கெட் எடுத்தார் #INDvsSA

தென்னாப்பிரிக்க அணியில் செனுரான் முத்துசாமி? இந்திய அணிக்கு எதிராக ஆடும் தமிழர்!

விசாகப்பட்டினம் : இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் செனுரான் முத்துசாமி என்ற வீரர் அறிமுகம் ஆகி இருக்கிறார்.

செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், அவரது பூர்வீகம் தமிழ்நாடு தான்.

தமிழரான அவர் சர்வதேச அரங்கில் இந்திய அணிக்கு எதிராக, இந்திய மண்ணில் அறிமுகம் ஆவதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த செனுரான் முத்துசாமி?

யார் இந்த செனுரான் முத்துசாமி?

25 வயது ஆகும் செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்தவர். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தென்னாப்பிரிக்க நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் அணிகளில் இடம் பிடித்து ஆடி வந்தார்.

ஆல் - ரவுண்டர் முத்துசாமி

ஆல் - ரவுண்டர் முத்துசாமி

இடது கை பேட்டிங் மற்றும் இடது கை சுழற் பந்துவீச்சாளரான செனுரான் முத்துசாமி ஆல் - ரவுண்டராக வலம் வருகிறார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை அளித்துள்ளார்.

பேட்டிங் சராசரி, விக்கெட்

பேட்டிங் சராசரி, விக்கெட்

செனுரான் முத்துசாமியின் முதல் தர பேட்டிங் சராசரி 32.72 ஆகும். லிஸ்ட் ஏ போட்டிகளில் 26.60 பேட்டிங் சராசரி வைத்துள்ளார். 69 முதல் தர போட்டிகளில் 129 விக்கெட்களும், 52 லிஸ்ட் ஏ போட்டிகளில் 48 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார்.

பயிற்சிப் போட்டி

பயிற்சிப் போட்டி

டெஸ்ட் தொடருக்கு முன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரே ஒரு ஓவர் தான் பந்துவீசும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதிலும் கலக்கினார் அவர்.

ஒரே ஓவரில் விக்கெட்

ஒரே ஓவரில் விக்கெட்

தனக்கு கிடைத்த ஒரே ஓவரில் விக்கெட் வீழ்த்தி தன் திறனை நிரூபித்துக் காட்டினார் செனுரான் முத்துசாமி. அதனால், தென்னாப்பிரிக்கா அணியில் வாய்ப்பு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அறிமுகம் ஆனார்

அறிமுகம் ஆனார்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் பெற்றார் முத்துசாமி. தென்னாப்பிரிக்க அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை களமிறக்க முடிவு செய்ததை அடுத்து அவருக்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்திய அணிக்கு எதிராக..

இந்திய அணிக்கு எதிராக..

இந்திய அணிக்கு எதிராகவே அறிமுகம் ஆகி இருக்கிறார் இந்த பூர்வீக தமிழர். அதுவும் இந்திய மண்ணில் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

விக்கெட் வீழ்த்துவார்

விக்கெட் வீழ்த்துவார்

செனுரான் முத்துசாமிக்கு இது நல்ல அறிமுகமாக கருதப்படுகிறது. காரணம், விசாகப்பட்டினம் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் ஆடுகளம். இரண்டாம் நாள் முதல் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என கூறப்படுகிறது. எனவே, அவர் அதிக விக்கெட்கள் வீழ்த்த வாய்ப்பு உள்ளது.

Story first published: Wednesday, October 2, 2019, 11:16 [IST]
Other articles published on Oct 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+