Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி வரை இங்க தான் நிப்பேன்.. கெத்து காட்டிய தென்னாப்பிரிக்க தமிழன்.. யாராலையும் அசைக்க முடியலையே!

Recommended Video

Senuran Muthusamy | கெத்து காட்டிய தென்னாப்பிரிக்க தமிழன்..திணறிய இந்திய பவுலர்கள்

விசாகப்பட்டினம் : இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் செனூரன் முத்துசாமி இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் நாட் - அவுட் ஆக நின்றார்.

தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்று இருக்கும் பூர்வீக தமிழரான செனூரன் முத்துசாமி, இந்திய அணிக்கு எதிராக தன் அறிமுகப் போட்டியில் ஆடினார்.

விக்கெட்டை வீழ்த்த..

விக்கெட்டை வீழ்த்த..

தன் முதல் போட்டியிலேயே பேட்டிங்கில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார் முத்துசாமி. இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் இந்திய பந்துவீச்சாளர்களால் அவர் விக்கெட்டை வீழ்த்தவே முடியவில்லை.

ஆல் - ரவுண்டர் முத்துசாமி

ஆல் - ரவுண்டர் முத்துசாமி

தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்ற செனூரன் முத்துசாமி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சுழற் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக வலம் வந்தவர். இந்தியமண்ணில் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர் தேவை என்பதால் தென்னாப்பிரிக்க அணியில் சேர்க்கப்பட்டார் அவர்.

பேட்டிங், பந்துவீச்சு எப்படி?

பேட்டிங், பந்துவீச்சு எப்படி?

தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடிய அவர், சுழற் பந்துவீச்சில் பயன்படுவார் என்று அணியில் சேர்க்கப்பட்டாலும், அவரால் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனினும், பேட்டிங்கில் தன்னை நிரூபித்தார்.

முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்

முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்

முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 502 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்க ஓரளவு போராடியது. எட்டாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய செனூரன் முத்துசாமி நிதான ஆட்டம் ஆடினார்.

களத்தில் நின்றார்

களத்தில் நின்றார்

தென்னாப்பிரிக்கா 376 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்தாலும், அந்த அணி 431 ரன்கள் வரை எட்ட முக்கிய காரணமாக இருந்தார். 106 பந்துகள் சந்தித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங்

இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங்

இரண்டாம் இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். 70 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்தது தென்னாப்பிரிக்கா அணி. முத்துசாமி ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

இறுதியில் போராடினார்

இறுதியில் போராடினார்

அவரும், பீடிட்டும் சேர்ந்து 91 ரன்களுக்கு கூட்டணி அமைத்து போராடினர். முத்துசாமி, முதல் இன்னிங்க்ஸ் போல இந்த முறையும் நூறு பந்துகளுக்கும் மேல் சந்தித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.

அரைசதம் அடிக்கும் வாய்ப்பு

அரைசதம் அடிக்கும் வாய்ப்பு

108 பந்துகள் சந்தித்து 49 ரன்கள் எடுத்தார் முத்துசாமி. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தும், ஒரு ரன்னில் அரைசதம் அடிக்கும் அரிய வாய்ப்பை நழுவவிட்டார். எனினும், நல்ல டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.

முக்கிய பேட்ஸ்மேன்

முக்கிய பேட்ஸ்மேன்

அஸ்வின், ஷமி, ஜடேஜா ஆகிய மூவரும் விக்கெட் வேட்டை நடத்தினாலும் முத்துசாமி விக்கெட்டை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் அவரை முக்கிய பேட்ஸ்மேனாக தென்னாப்பிரிக்கா பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் அவர் விக்கெட்டை வீழ்த்த இப்போதே திட்டமிட வேண்டும்.

விராட் கோலி விக்கெட்

விராட் கோலி விக்கெட்

பந்துவீச்சில் சுமாராகவே செயல்பட்ட முத்துசாமி, ஒரே ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதுதான் அவரது முதல் டெஸ்ட் விக்கெட். அவரிடம் வீழ்ந்தது வேறு யாருமல்ல. உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தற்போது வலம் வரும் விராட் கோலி தான்.

Story first published: Tuesday, October 8, 2019, 12:29 [IST]
Other articles published on Oct 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+