மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்றில் டி20 மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் விளையாடுகிறது. அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
இதற்கான இந்திய அணியை தயார் செய்யும் வகையில் இந்த தொடரை பிசிசிஐ பயன்படுத்த உள்ளது. இந்த நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் t20 மற்றும் ஒரு நாள் தொடரிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

இதனால் இந்திய அணி இளம் வீரர்களை வைத்துக் கொண்டே தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக விளையாடுகிறது. இந்த சூழலில் இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்திருக்கிறார். அதனை தற்போது காண்போம். நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி டீசன்டாக விளையாடி அரையிறுதி வரை வந்தது.
ஆனால் தற்போது சொந்த மண்ணில் இந்த போட்டி நடைபெற உள்ளதால் தென்ஆப்பிரிக்காவே வெற்றிபெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் தற்போது டெத் ஓவர்களில் பந்து வீச போதிய வீரர்கள் இல்லை. ஆர்ஸ்தீப் சிங் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசினாலும் அவர் கடந்த ஆண்டு எப்படி செயல்பட்டாரோ அதேபோல் தற்போது செயல்படவில்லை.
பும்ராவும் இல்லாததால் இந்திய அணி இந்த தொடரில் நிச்சயம் பல சவால்களை சந்திக்கும். மொத்தம் எட்டு போட்டிகள் இந்த தொடரில் நடைபெறுகிறது. இதில் ஐந்து போட்டிகளில் தென்னாப்பிரிக்காவும் மூன்று போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெறும் என நான் நினைக்கிறேன். என்னுடைய கணிப்பு தவறாகவும் செல்லலாம். ஆனால் அது தவறாக வேண்டும் நான் சொன்னதை தவறு என்று இந்திய வீரர்கள் நிரூபிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்த தொடர் நடைபெறுவதால் இளம் வீரர்கள் கடும் சவால்களை சந்திக்க நேரிடும். எதிர்பார்ப்பை மீறி கடுமையாக ஆடுகளத்தில் செயல்பட்டால் மட்டுமே உங்களால் தென்னாப்பிரிக்காவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று ஆகாஷ் சோப்ரா கணித்திருக்கிறார்.