Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட் இடத்திற்கு ஆப்பு? புதிய திட்டத்தை வகுக்கும் பிசிசிஐ.. தென்னாப்பிரிக்க தொடரில் அறிமுகம்!

மும்பை: இந்திய அணியில் ரிஷப் பண்ட்- ஐ நீக்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | ENG vs NZ | India's Batting Order | IND vs SA #CricketWrap

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து சர்வதேச போட்டிகள் வரவுள்ளன. தென்னாப்பிரிக்க மற்றும் இங்கிலாந்து தொடர்களில் இந்திய அணி மோதவுள்ளது.

இந்திய அணி போட்டிகள்

இந்திய அணி போட்டிகள்

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் 9ம் தேதி முதல் ஜூன் 19ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதன் பின்னர் ஜூலை 1ம் தேதி முதல் ஜூலை 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த 2 தொடர்களில் இருந்து தான் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்கள் தேர்வாகலாம்.

பண்ட் நீக்கம்?

பண்ட் நீக்கம்?

இந்நிலையில் ரிஷப் பண்ட் அணியில் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. சர்வதேச போட்டிகளில் ரிஷப் பண்ட் பேட்டை சுழற்ற மட்டுமே செய்கிறார், சூழலுக்கு ஏற்ப ஆடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இக்கட்டான சூழலில் கூட அதிரடியை மட்டுமே நம்பி விக்கெட்டை பறிகொடுத்துவிடுகிறார். இதனால் தான் இந்த முடிவுக்கு எடுக்கப்பட்டுள்ளது.

2 மாற்று வீரர்கள்

2 மாற்று வீரர்கள்

ஐபிஎல் தொடரில் சீனியர் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அட்டகாச கம்பேக் கொடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 போட்டிகளில் 487 ரன்கள் மற்றும் தினேஷ் கார்த்திக் 16 போட்டிகளில் 330 ரன்களை சேர்த்துள்ளார்.

எப்போது மாற்றம்

எப்போது மாற்றம்

எனவே வரவுள்ள தென்னாப்பிரிக்க தொடரில் ஹர்திக் பாண்ட்யா 4வது வீரராகவும், தினேஷ் கார்த்திக் 5வது இடத்தில் ஃபினிஷராகவும் செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. விக்கெட் கீப்பர் பணிக்கும் தினேஷ் கார்த்திக் பொருத்தமாக இருக்கிறார். இக்கட்டான சூழலிலும் அணியை காப்பாற்றி விடுகிறார். இதன் காரணமாக உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடருக்கு தினேஷ் கார்த்திக்கை ஃபினிஷராக தயார் செய்ய ஆலோசனை நடந்து வருகிறது.

Story first published: Friday, June 3, 2022, 12:40 [IST]
Other articles published on Jun 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+