Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: சுப்மன் கில் கோல்டன் டக்.. இன்னும் இந்த கொடுமையை எவ்வளவு போட்டி பார்க்கனும்?

சந்திகார்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் ஆகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. 2026 டி20 உலக கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு இடையில் இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது.

இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங் சிக்கல் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் களமிறங்கியபோது எந்த ஒரு பிரச்சனையும் அணியில் இல்லாமல் இருந்தது.

Shubman gill

ஆனால் தேவையில்லாமல் தேர்வு குழுவினரும் பயிற்சியாளர் கம்பீரும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கில், சிறப்பாக செயல்பட்டார் என்ற காரணத்திற்காக அவருக்கு டி20 போட்டியிலும் இடம் கொடுத்து கவுரவித்தார்கள். ஆனால் கில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். நடப்பாண்டில் மட்டும் கில் 14 இன்னிங்ஸ் டி20 கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். இதில் அவர் ஒரு முறை கூட 50 ரன்கள் அடிக்கவில்லை.

கடந்த 14 இன்னிங்ஸில் ஐந்து முறை கில் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து இருக்கின்றார். இன்னும் சொல்லப்போனால் கடந்த 14 இன்னிங்ஸில் 9 முறை 20 ரன்கள் கூட தாண்டாமல் ஆட்டம் இழந்து இருக்கிறார். கில் இப்படி தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்திய அணியின் தொடக்கம் ஆட்டம் கண்டு வருகிறது. இதனால் அபிஷேக் ஷர்மாவுக்கு தேவையில்லாத நெருக்கடி ஏற்படுகிறது.

கில்லுக்கு மட்டும் ஏன் இத்தனை வாய்ப்புகள் தரவேண்டும் என்றும் சஞ்சு சாம்சனுக்கு இதுபோல் வாய்ப்பு வழங்கப்பட்டதா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கில்லுக்கு இப்படி வாய்ப்பு தருவதால் தான் இந்தியா பேட்டிங்கில் தடுமாறி வருவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு உள்ளனர்.

கில் டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்றும் அவர் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் ரசிகர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு முறை கூட பத்து ரன்களை தொட்டது கிடையாது. இதுவரை 4 இன்னிங்ஸ் கில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டிகளின் விளையாடி இருக்கிறார் 0,8,4,0 ஆகிய ரன்கள் மட்டுமே அடித்து இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் கில் எப்போதெல்லாம் 200 ரன்களை சேஸிங் செய்ய வேண்டும் என்ற கட்டத்தில் களமிறங்குகிறாரோ அப்போதெல்லாம் 10 ரன்களை கூட அவர் அடித்தது கிடையாது. 5 மற்றும் 0 ஆகிய ரன்களில் அவர் ஆட்டம் இழந்து இருக்கிறார். கில் கடைசியாக விளையாடி 10 இன்னிங்ஸில் மொத்தமாகவே 181 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். இதில் அவருடைய சராசரி 22 ஆகும்.

Story first published: Thursday, December 11, 2025, 21:57 [IST]
Other articles published on Dec 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+