மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது யாருமே முறியடிக்க முடியாது என நினைக்கப்பட்ட சாதனைகள் தற்போது எளிதாக முறியடிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் விராட் கோலி சச்சினின் அதிக ஒரு நாள் சதம் சாதனையை முறியடித்து அசத்தினார்.
இந்த நிலையில் அடுத்த விராட் கோலி என ரசிகர்களால் போற்றப்படும் கில் சச்சினின் சாதனையை முறியடிக்க இருக்கிறார். இதனை ரசிகர்கள் சிலர் மாமனாரின் சாதனையை மருமகன் முறியடிக்க போகிறார் என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் சச்சின் மகள் சாரா டெண்டுல்கரை கிரிக்கெட் வீரர் கில் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இல்லை. எனினும் இவர்கள் இருவருமே டேட்டிங் செய்ததாக ரசிகர்கள் நம்புகின்றனர். இதனால் சச்சினை மாமனார் என்றும் கில்லை மருமகன் என்றும் தான் ரசிகர்கள் அழைப்பதுண்டு.
இந்த நிலையில் சச்சின் மாபெரும் சாதனை ஒன்றை கில் முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் பவுண்டரிகளில் மட்டும் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருக்கிறார். அதாவது 1998 ஆம் ஆண்டு சச்சின் நான்கு மற்றும் ஆறு ரன்கள் அடித்து மொத்தமாக 992 ரன்களை பவுண்டரிகளாக சேர்த்து இருக்கிறார்.
தற்போது 2023 ஆம் ஆண்டு பவுண்டரிகளாக (4+6) அடித்து 966 குவித்திருக்கிறார். சச்சின் சாதனையை முறியடிக்க அவர் பௌண்டரி அல்லது சிக்ஸராக 26 ரன்கள் சேர்க்க வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் இன்னும் எஞ்சி இருக்கிறது. அதில் கில் விளையாடுகிறார். இதனால் அந்த 26 ரன்களை பௌண்டரிகளாக மூன்று போட்டிகளில் அடிக்க கில்லுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
அதனை மட்டும் கில் அடித்தால் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் பவுண்டரிகளாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கில் பெறுவார். கில்லுக்கு அடுத்த இடத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். அவர் நடப்பாண்டில் பவுண்டரிகளாக 926 ரன்கள் சேர்த்து இருக்கிறார். எனினும் ரோகித் சர்மா ஒரு நாள் தொடரில் இடம் பெறாததால் அவரால் இந்த சாதனையை முறியடிக்க முடியாது.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தில் நியூசிலாந்து வீரர் கில் இருக்கிறார். அவர் 2015 ஆம் ஆண்டு பவுண்டரிகளாக 900 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இந்திய அணியில் முன்னாள் கேப்டன் கங்குலி இருக்கிறார். அவர் 1999 ஆம் ஆண்டு 888 ரன்கள் பவுண்டரிகளாக அடித்திருக்கிறார்.