For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய டெஸ்ட் வீரர்களிடையே பயிற்சி போட்டி.. கில்லியாக ஆடிய இளம் வீரர்.. இனி நம்பர் 3ல் அவர்தான்!

ப்ரிடோரியா: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அடுத்ததாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவுள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணி தீவிரமாக உள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

IND vs SA : Shubman Gill Scored a Century in the Intra Squad Practice Test Match for the South Africa Test Series

ஆனால் இம்முறை புதிய வரலாறு படைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் பவுலர்கள் காயமடைந்துள்ள நிலையில், இந்திய அணியும் முழு பலத்துடன் களமிறங்கவுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி காயமடைந்து விலகினாலும், பும்ரா, சிராஜ், ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.

கடந்த முறை தென்னாப்பிரிக்கா மண்ணில் ஷர்துல் தாக்கூர் ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் 4வது வேகப்பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடக்கவுள்ள நிலையில், அந்த மைதானத்தில் இருந்து சிறிய தூரத்தில் அமைந்துள்ள டுக்ஸ் ஓவல் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் 3 நாள் பயிற்சி போட்டி இந்திய வீரர்களுக்கு இடையில் நடக்கவுள்ளது. இதன் முதல் நாளில் ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளது. இதில் ரோகித் சர்மா சிறந்த பேட்டிங்கை விளையாட, யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

இதன்பின் மற்ற வீரர்கள் பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரிட்டையர்டாகி வெளியேறினார். பின்னர் களம் புகுந்த சுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதம் விளாசியுள்ளார். தொடர்ந்து வந்த விராட் கோலியும் சிறப்பாக பேட்டிங் செய்ய, இந்திய அணியின் டாப் 4 வீரர்கள் ஃபார்மில் உள்ளது தெரிய வந்துள்ளது. உலகக்கோப்பைக்கு பின் சுப்மன் கில் மீண்டும் தனது ஃபார்மை மீட்டுள்ளார்.

மைதானத்தில் ரசிகர்களோ, மீடியோவோ அனுமதிக்கப்படவில்லை. கதவுகளை அடைத்து ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேபோல் உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் களமிறங்கி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 21, 2023, 22:46 [IST]
Other articles published on Dec 21, 2023
English summary
IND vs SA : Shubman Gill Scored a Century in the Intra Squad Practice Test Match for the South Africa Test Series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+