Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA : சுப்மன் கில் கேட்ட ஜெர்சி நம்பர்.. கொடுக்க மறுத்த பிசிசிஐ.. பின்னணியில் எம்எஸ் தோனி!

மும்பை: இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில், தோனியின் ஜெர்சி நம்பரான 7-ஐ கேட்ட போது, பிசிசிஐ தரப்பில் மறுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த தலைமுறைக்கான நட்சத்திர வீரராக உயர்ந்து வருகிறார் சுப்மன் கில். அதற்கேற்ப டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் படைத்து வரும் சாதனைகள் அனைவரையும் வியக்க வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

IND vs SA : Shubman Gill wanted No.7 Jersey from BCCI during his U19 days and India team Debut Match

இதனிடையே இன்று காலை தோனி ஜெர்சி 7-க்கு பிசிசிஐ தரப்பில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி நம்பரான 10ஆம் எண் எப்படி எந்த வீரருக்கும் அளிக்கப்படாதோ, அதேபோல் தோனியின் 7ஆம் எண்ணும் எந்த வீரருக்கும் அளிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தோனி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தோனியின் ஜெர்சி எண்ணான நம்பர் 7-ஐ யு19 கிரிக்கெட்டின் போதே இளம் வீரர் சுப்மன் கில் கேட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வழக்கமான எந்த வீரரும் தேசிய அணிக்காக ஆடினாலும் 0 முதல் 99 வரை எந்த ஜெர்சி எண்ணை வேண்டுமானாலும் எடுக்க அனுமதி அளிக்கப்படும். அதில் தற்போதிய வீரர்களின் பயன்படுத்தும் எண்கள் மட்டும் அளிக்கப்படாது.

அந்த வகையில் சுப்மன் மில் இந்திய யு19 அணிக்காக விளையாட களமிறங்கிய போது, தோனியின் ஜெர்சி எண்ணான 7ஐ தான் கேட்டுள்ளார். ஆனால் அவர் பிடிவாதமாக கேட்டும் பிசிசிஐ தரப்பில் 7ஆம் எண் ஜெர்சி அவருக்கு அளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக தான் சுப்மன் கில் 77 எண் கொண்ட ஜெர்சியை தேர்வு செய்துள்ளார்.

அண்மையில் கூட பிரபல கால்பந்து அணியான பிஎஸ்ஜி அணி தரப்பில் சுப்மன் கில்லுக்கு ஜெர்சி வழங்கப்பட்ட போது, அவரின் பெயர் பொறித்து நம்பர் 7ஆம் எண் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டது. அப்போதே ரசிகர்கள் பலரும் சுப்மன் கில் ஜெர்சி எண் தவறாக இருந்ததாக கூறி வந்தனர். ஆனால் சுப்மன் கில் வேண்டுமென்றே தான் 7ஆம் எண் கொண்ட ஜெர்சியை வாங்கியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

Story first published: Friday, December 15, 2023, 13:41 [IST]
Other articles published on Dec 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+