Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: பாடம் கற்றோம்.. டி20 உலககோப்பையில் பார்த்து கொள்கிறோம்.. தென்னாப்பிரிக்க கேப்டன் வார்னிங்

அகமதாபாத்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து 14 முறை டி20 தொடரை வென்று இருக்கிறது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க அணி கேப்டன் மார்க்கரம், இந்த தோல்வி மிகவும் கடினமாக இருக்கின்றது. 230 ரன்கள் என்ற பெரிய இலக்கை சேஸ் செய்யும்போது எந்த தவறையும் பேட்டிங்கில் செய்யக்கூடாது.குயிண்டன் மற்றும் டாப் ஆர்டரில் உள்ள பேட்ஸ்மேன்கள் எங்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்தார்கள்.

Aiden markram

பிரவீஸ், டீ காக்கும் விளையாடிய போது நாங்கள் ஆட்டத்தில் மீண்டு வந்தோம். ஆனால் நடு ஓவர்களில் அவர்கள் ஏற்படுத்திய உத்வேகத்தை எங்களால் கடத்திக் கொண்டு செல்ல முடியவில்லை. எனினும் இந்த தொடரில் இருந்து நிறைய நல்ல விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொள்கின்றோம்.

குறிப்பாக ஒரு அணியாக நாங்கள் பல பாடங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம். அது நிச்சயம் உலகக்கோப்பைக்கு உதவிகரமாக இருக்கும். எங்கள் வீரர்களுக்கு இந்த அனுபவம் விலைமதிக்க முடியாததாக இருக்கும். நெருக்கடியான கட்டத்தில் பிரவீஸ், இசை சோதிக்க நாங்கள் முயற்சி செய்தோம்.அவரும் பிரமாதமாக விளையாடி இருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் இடது கை, வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மாற்றங்களை எல்லாம் செய்தோம். என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் இந்த பேட்டிங் ஆர்டர் தான் பின்பற்ற வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.

அதை தான் நாங்கள் இன்று செய்தோம். இதை தான் உலகின் பல்வேறு அணிகளும் ஃபாலோ செய்து வருகிறது. நிச்சயமாக இந்த போட்டி கடும் சவால்களை அளித்தது. நாங்களும் இந்த தொடரில் இந்தியாவுக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினோம். தற்போது இந்த தொடர் மூலம் இனி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவான ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது. உலகக்கோப்பை வெல்ல என்ன என்ன தேவை என்பது குறித்து தெரிந்து கொண்டோம்.

நாங்கள் தரமான ஒரு இந்திய அணியை எதிர்கொண்டு இருக்கின்றோம். இந்த தொடரின் வெற்றிக்கு இந்தியாவுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். டி 20 போட்டியில் இன்னும் எந்தெந்த இடத்தில் நாங்கள் முன்னேற வேண்டும் என்பது குறித்து கண்டு கொண்டிருக்கின்றோம். இந்த இரண்டு வாரம் நாங்கள் கற்றுக் கொண்ட விஷயம் விலைமதிப்பற்றது என்று மார்க்கரம் கூறியுள்ளார்.

Story first published: Friday, December 19, 2025, 23:41 [IST]
Other articles published on Dec 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+