For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA: நாங்க சோக்கர்ஸ் அல்ல.. வில்லியம்சனிடம் இந்தியாவில் வெல்ல ஐடியா கேட்டேன்.. கேப்டன் பவுமா

கொல்கத்தா: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் கொல்கத்தாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி கடைசியாக இந்திய மண்ணில் 2010 ஆம் ஆண்டு தான் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.

அதன் பிறகு நடைபெற்ற ஏழு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவியுள்ளது. இதனால் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆக களமிறங்கும் தென்னாப்பிரிக்கா, இந்தியாவில் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Temba Bavuma

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வது எப்போதுமே முதன்மையாக இருக்கும். அதை எந்த தொடராலும் தட்டிக்க முடியாது. ஆனால் இந்தியாவில் பெரும் வெற்றி.

அதற்கு அடுத்ததாக இரண்டாவது மிகப் பெரிய விஷயமாக இருக்கும். எங்களால் இந்தியாவில் பல ஆண்டுகளாக வெற்றியை பெற முடியவில்லை. அது மட்டும் நாங்கள் செய்யாமல் இருக்கின்றோம். இம்முறை கண்டிப்பாக வெற்றி பெறுவோம். அதற்கான உத்வேகத்துடன் களமிறங்குகிறோம். இந்தியாவில் நாங்கள் எவ்வளவு சவால்களை எதிர்கொள்வோம் என்று எங்களுக்கு தெரியும்.

கடந்த காலங்களில் நாங்கள் இங்கு தோல்வியை தழுவிய வலி இன்னும் இருக்கின்றது. ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் இரண்டு மாதத்திற்கு முன்பு கேன் வில்லியம்சனை நான் சந்தித்தேன். அப்போது இந்தியாவில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்று சில விஷயங்களை கேட்டு அறிந்தேன். அவர் எனக்கு முழுமையாக சொல்லவில்லை.

ஆனால் டாசை எப்படியாவது ஜெயித்து விடுங்கள் என்று மட்டும் அவர் சொன்னார். எனவே டாஸ் வீசுவதற்கு நான் பயிற்சி செய்து வருகின்றேன். குல்திப் யாதவ் ஒரு அபாயகரமான பவுலராக இருப்பார். அவர் இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடும் போது அவருடைய பந்துவீச்சை நான் எதிர்கொண்டேன். கேப்டனாக இருக்கும் போது நாம் நம்மையே தேடி நம்மைப் பற்றி புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ள முடியும்.

என்னுடைய திறமையை நான் யாருக்கும் எதற்கும் நிரூபிக்க தேவையில்லை. எங்களின் முடிவே அதைப்பற்றி பேசும் பாக்ஸிங் டே டெஸ்ட் எப்போதுமே எங்களுக்கு ஒரு திருவிழா போன்று ஆகும். ஆனால் இம்முறை அது இடம் பெறாதது வருத்தத்தை தருகின்றது. எனினும் இந்தியா தொடரை நாங்கள் சிறப்பாக விளையாடி இங்கு வெற்றி பெற்று கொண்டாடுவோம் என நம்புகிறேன்.

சோக்கர்ஸ் என்று அழைக்கிறார்கள்.அதை எல்லாம் நாங்கள் எப்போதும் கடந்து சென்று விட்டோம். எங்கள் மனநிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது எங்களை யாரும் அப்படி கிண்டல் செய்வது கிடையாது பாராட்டத்தான் செய்கிறார்கள். உலகக்கோப்பை வெற்றி எங்களுக்கு மன நிம்மதியை கொடுத்தது நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றோம். வெற்றிக்காக முயற்சி செய்வோம் என்று பவுமா கூறியுள்ளார்.

Story first published: Thursday, November 13, 2025, 21:33 [IST]
Other articles published on Nov 13, 2025
English summary
Ind vs SA- South africa captain Temba Bavuma speaks about importance of Winning in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+